சென்னை சர்வதேசத் திரைப்படவிழாவில் மசாலாப்படங்களா?

685

சென்னையில் சர்வதேசத் திரைப்பட விழா என்ற பெயரில் ஒரு திரைப்பட விழாவை கடந்த 13 ஆண்டுகளாக தனியார் அமைப்பு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான திரைப்பட விழா இம்மாதம் நடைபெற இருந்தது.

ஜெயலலிதா மறைவையொட்டி சென்னையில் சர்வதேசத் திரைப்பட விழா ஜனவரி மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தவிழாவில் திரையிடுவதற்காக, ராஜு முருகன் இயக்கத்தில் வெளியாகி பெரிதும் பேசப்பட்ட ‘ஜோக்கர்’ படம் உட்பட 12 படங்கள் தேர்வாகியுள்ளன.

சூர்யா நடித்து, தயாரித்த ‘24’, ‘பசங்க-2’ ஆகிய படங்களும் இவ்விழாவில் திரையிட தேர்வாகியுள்ளன.

இந்த படங்களுடன் அமலாபால் முக்கிய கேரக்டரில் நடித்த ‘அம்மா கணக்கு’, பிரபு தேவா, தமன்னா நடித்த ‘தேவி’, விஜய்சேதுபதியின் ‘தர்மதுரை’, மற்றும் ‘கர்மா’, ‘இறைவி’, ‘நானும் ரௌடி தான்’, ‘உறியடி’ இன்னும் திரைக்கு வராத ’ரூபாய்’, ‘சில சமயங்களில்’ ஆகிய படங்களும் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

சர்வதேச திரைப்பட விழா என்ற பெயரில் நடத்தப்படும் இந்த திரைப்படவிழாவில் இறைவி, தேவி, நானும் ரௌடிதான் ஆகிய படங்கள் திரையிடப்படுவதற்கு சமூகவலைத்தளங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இறைவி மொக்கையான கதையும் திரைக்கதையும் கொண்ட படம்.

பிரபுதேவா நடித்த தேவி படமோ ஆங்கிலப்படத்திலிருந்து சுடப்பட்ட வழக்கமானதொரு பேய்ப்படம்.

நானும் ரௌடிதான் சராசரியான காமெடி படம் என்றெல்லாம் சமூகவலைத்தளங்களில் கமெண்ட்ஸ் பறக்கின்றன.

இந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள் வழங்கிய நன்கொடையில்தான் படவிழாவே நடைபெறுகிறது என்பது கமெண்ட் அடிப்பவர்களுக்கு தெரியாது. தெரிந்திருந்தால் இப்படிப்பட்ட கமெண்ட்ஸ் வந்திருக்குமா?