சிசிஎல் கிரிக்கெட்…. விக்ராந்த், விஷ்ணு பாலிடிக்ஸ்… கேப்டன் பதவியிலிருந்து ஜீவா விலகல்….

876

நடிகர் அப்பாஸ் மிகச்சிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர்.

தன்னைப்போலவே கிரிக்கெட் விளையாடத் தெரிந்த சக நடிகர்களை வைத்து பொழுதுபோக்காக கிரிக்கெட் விளையாட எண்ணினார்.

அதற்காக ஒரு போட்டியை நடத்த வேண்டும் என்று அப்பாஸ் போட்ட பிள்ளையார்சுழிதான் – சிசிஎல் என்கிற செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்.

பொழுதுபோக்காக எண்ணி நட்சத்திரங்கள் விளையாட ஆரம்பித்த சிசிஎல் இன்றைக்கு கோடிக்கணக்கான வருவாய் தரும் அளவுக்கு மிகப்பெரிய பிசினஸ் ஆக மாறிவிட்டது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள, ஹிந்தி, மராட்டி மொழிகளைச் சேர்ந்த திரைப்படக்கலைஞர்கள் பங்குபெறும் வகையில் சிசிஎல் என்கிற செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் என்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டி சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டது.

இந்தப் போட்டியில் தமிழ்த்திரைப்பட உலகைச் சேர்ந்த நடிகர்களின் அணிக்கு சென்னை ரைனோஸ் என்று பெயர் சூட்டப்பட்டது.

இந்த அணியின் ஆணிவேராக இருந்த நடிகர் அப்பாஸை, ட்ரிபிள் வி என்று அழைக்கப்பட்ட விஷால், விக்ராந்த், விஷ்ணு ஆகியோர் பாலிடிக்ஸ் செய்து வெளியே அனுப்பினார்கள்.

சென்னை ரைனோஸ் அணியைவிட்டே அப்பாஸ் போய்விட, அவரது ஆதரவாளர்களான நடிகர் ஸ்ரீகாந்த், ஷாம் ஆகியோரும் ஓரங்கட்டப்பட்டனர்.

இந்த அணியின் கேப்டனாக விஷால் உள்ளே வந்த பிறகு, அவருக்கும் சென்னை ரைனோஸ் அணியின் பங்குதாரர்களில் ஒருவரான சரத்குமாருக்கும் தகராறு மூண்டது.

அவரையும் சென்னை அணியின் நிர்வாகத்திலிருந்து தள்ளி வைத்தனர்.

விஷால் உள்ளே வந்த பிறகு தனக்கு நெருக்கமான விக்ராந்த், விஷ்ணு ஆகியோருக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார்.
அதன் காரணமாக சென்னை ரைனோஸ் அணியில் பாலிடிக்ஸ் தலையெடுத்தது.

விக்ராந்த், விஷ்ணு இல்லாமல் சென்னை ரைனோஸ் அணி இல்லை என்ற நிலை உருவானது.

‘ட்ரிபிள் வி’யின் கொட்டம் அதிகமானதால் கடுப்பான நடிகர் ஜீவா, தன் பாணியில் ஒரு பாலிடிக்ஸ் செய்து விஷாலை கேப்டன் பதவியில் இருந்தே துரத்தியதோடு கடந்த வருடம் தானே கேப்டனானார்.

இந்நிலையில் விரைவில் சிசிஎல் சீசன் 6 தொடங்க உள்ளது.

நாங்கள் இரண்டு பேரும் இல்லை என்றால் சென்னை ரைனோஸ் அணி ஜெயிக்கவே முடியாது என்ற தெனாவெட்டில் திரியும் விக்ராந்த், விஷ்ணு இருவரும் சென்னை ரைனோஸ் அணியில் விளையாட மாட்டோம் என்று முரண்டு பிடித்து வருகின்றனர்.

அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய சென்னை ரைனோஸ் அணியின் உரிமையாளரிடம் இரண்டு நிபந்தனையை விதித்துள்ளனர்.

ஒன்று… ஜீவாவை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, எங்களில் ஒருவரை கேப்டனாக்க வேண்டும். அல்லது பழையபடி விஷாலை மீண்டும் கேப்டனாக்க வேண்டும்.

இரண்டு… மற்ற நடிகர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தைவிட எங்கள் இரண்டு பேருக்கும் இரண்டு மடங்கு சம்பளம் கொடுக்க வேண்டும்.

விக்ராந்த், விஷ்ணுவின் பாலிடிக்ஸைக் கண்டு கடுப்பான ஜீவா, உங்க சகவாசமே வேண்டாம் சாமி என்று சென்னை ரைனோஸ் அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டாராம்.

ஜீவா பதவி விலகியதால், தற்போது ஆர்யா கேப்டனாகி இருக்கிறாராம்.