சேரன் என்ன குரங்கா? – அமீருக்கு ஏற்பட்ட சந்தேகம்…!

1282

தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலித்து மக்களை சுரண்டுகின்றனர் – திரையுலகினர்.

எனவே திருட்டு விசிடி பக்கம் திரும்பிவிட்டனர் மக்கள்.

திருட்டு விசிடிக்கு பழக்கப்பட்ட மக்களை உரிமம் பெற்ற டிவிடிக்களை பார்க்க வைக்க  C2H என்ற நிறுவனத்தைத் தொடங்கி உள்ளார் இயக்குநர் சேரன்.

C2H  நிறுவனத்தின் தொடக்கவிழாவில் அமீர் பேசினார்…

”சில மாதங்களுக்கு முன் சேரன் என்னை அழைத்து இந்த விஷயங்களை எல்லாம் சொன்னார். அப்போது அவரது பார்ட்னர்களும் கூட இருந்தார்கள். அவர்கள் சொன்னதை எல்லாம் கேட்ட பிறகு எனக்கு தோன்றியது என்ன தெரியுமா?

புதுப்புது மருந்துகளை தயாரிக்கும்போது அவற்றை முதலில் குரங்களுக்குக் கொடுத்து பரிசோதனை செய்வார்கள். அப்படி செய்யும்போது பல குரங்குகள் செத்துவிடுவதும் உண்டு.

அதுபோல் சேரனை பரிசோதனை குரங்காக்கிவிட்டீர்களா என்று அவரது பார்ட்னர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் பதில் ஏதும் சொல்லவில்லை.

சேரன்தான் பதில் சொன்னார். இந்த சினிமா நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முயற்சியை செய்கிறோம். என்னை பலி கொடுத்தால்தான் சினிமா வாழும் என்றால் நான் பலியாகத் தயாராக இருக்கிறேன் என்று சொன்னார்.”

என்று அமீர் பேசியபோது உணர்ச்சிவசப்பட்டு நின்றார் சேரன்.