தமிழ்நாட்டில் மட்டும் 350 தியேட்டர்களில் பூமராங்

110

ஆர் கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள பூமராங் படம் கடந்த வாரம் வெளியாக இருந்தது.

அப்படத்தின் தமிழ்நாடு தியேட்டரிகல் ரைட்ஸை வாங்கியி விநியோகஸ்தர் செய்த குளறுபடியினால் பட வெளியீடு தள்ளிப்போனது.

இந்நிலையில் இன்று பூமராங் படம் திரைக்கு வந்துள்ளது.

சென்னை 19, செங்கல்பட்டு 70, வட ஆற்காடு 29, தென் ஆற்காடு 28, திருச்சி 31, சேலம் 49, மதுரை 44, கோவை 64, நெல்லை 16, என தமிழ்நாட்டில் மட்டும் 350 தியேட்டர்களில் பூமராங் வெளியாகி இருக்கிறது.

இது தவிர தமிழ்நாடு ஆந்திரா எல்லையான சித்தூரில் 5 தியேட்டர்களில் வெளியாகி இருக்கிறது.

கடந்த வாரம் தடம், 90 எம்எல். திருமணம் என 3 படங்கள் வெளியாகின. அந்தப்படங்களுடன் பூமராங் வெளியாகி இருந்தால் 200 தியேட்டர்கள் வட கிடைத்திருக்காது. ஒருவாரம் தள்ளி ரிலீஸ் செய்ததால் சுமார் 150 தியேட்டர்கள் கூடுதலாக கிடைத்துள்ளன.

பொறுத்தார் பூமி ஆள்வார். பூமராங் படத்துக்கும் இது பொருந்தும்.