அமேஸான் பிரைம் வீடியோவில் பாபி சிம்ஹா

vella-raja-KEYART-2b

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, பாபி சிம்ஹா – பார்வதி நாயர் நடிக்கும் இத்தொடர், டிசம்பர் 7 அன்று, அமேஸான் பிரைம்வீடியோவில் பிரத்தியேகமாக அறிமுகம் செய்யப்படவுள்ளது.

சமீபத்திய மற்றும் பிரத்தியேக திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட் அப் காமடி, பிரைம் ஒரிஜினல் நிகழ்ச்சிகள், விளம்பரமின்றி இசை கேட்டலுக்கான அமேஸான் பிரைம் மியூசிக், தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளின் துரிதமான இலவச டெலிவரி, டாப் டீல்களுக்கான அணுகுவசதி, பிரைம் ரீடிங் உடன் அன்லிமிடெட் ரீடிங் ஆகியவை அனைத்தும் பிரதி மாதம் ரூ.129 கட்டணத்தில் வழங்கும் மிகச்சிறந்த மதிப்பினை பிரைம் வழங்குகிறது.

பிரைம் உறுப்பினர்களுக்கான தனது முதல் பிரைம் பிரத்தியேகத் தொடராக, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடனான கூட்டாண்மையில் உருவாக்கப்பட்டுள்ள வெள்ள ராஜா- ன் அறிமுகத்தினை அமேஸான் பிரைம் வீடியோ அறிவித்துள்ளது.

டிசம்பர் 7, 2018 அன்று 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் ஒளிபரப்பபடவுள்ள வெள்ளை ராஜா பிரைம் உறுப்பினர்களுக்காக, தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும் கிடைக்கப்பெறும்.

அமேஸான் பிரைம் வீடியோ இந்தியா, உள்ளடக்கப்பிரிவின் இயக்குனர் மற்றும் தலைவர் விஜய் சுப்ரமணியம்,

“எங்களது தமிழ் பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் தொகுப்புகளின் உள்ளடக்கத்திற்கு நாங்கள் தமிழக நேயர்களிடம் சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளோம்.

இந்தியாவிலிருந்து கதைகளை எடுக்கவும் மற்றும் உள்ளுர் விவரணைக்குப் பொருந்தும் அதே நேரத்தில் உலகளாவிய அம்சங்களையும் கொண்டுள்ள கதைகளை உருவாக்கவும் உறுதிப்பாடு மேற்கொண்டுள்ளோம்.

சிறந்த கதைகளை பல்வேறு மொழிகளிலும் கூறும் அமேஸான் பிரைம் வீடியோவின் உறுதிப்பாட்டினை இது மறுஉறுதி செய்கிறது.

சர்வதேச ரீதியிலான, பிராந்திய மற்றும் உள்ளூர் தலைப்புகளை தொடர்ந்து இந்தியாவிலும் மற்றும் உலகளாவிய அளவிலும் அறிமுகம் செய்வதில் நாங்கள் தொடர்ந்து ஈடுபடவுள்ளோம்” என்று கூறினார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், எஸ்ஆர்.பிரபு…

“தமிழில், பிரம்மாண்டமான முறையில், ஒரு தைரியமான கதையை சொல்வதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியும்மற்றும் ஆர்வமும் கொண்டுள்ளோம்.

எங்களது அனைத்து பணிகளிலும், தரமான பொழுதுபோக்கினை வழங்க நாங்கள் அயராது முயற்சிக்கிறோம்.

வழக்கம்போல், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நாங்கள் ஆழமாக உருவாக்கியுள்ளோம் மற்றும் ஒரு சிக்கல், மர்மம் நிறைந்த போதை மருந்து உலகம் குறித்து, சிற்சில புன்னகை நேர்வுகளுடன் இந்த பிரைம் பிரத்தியேக தொடரை வடிவமைத்துள்ளோம்.

ஆர்வமூட்டும் கதை, நம்பத்தக்க இயக்குனர்கள்,தயாரிப்பாளர்கள் மற்றும் உறுதியான நட்சத்திர பட்டாளத்தைக் கொண்டுள்ள இது, பிரைம் வீடியோ நேயர்களால் பெரிதும் விரும்பப்படும் என்று நம்புகிறோம்.

மேலும் இந்த உள்ளுர் கதையை இந்தியாவிலுள்ள நேயர்களுக்கு ஏற்றவாறு மட்டுமின்றி, அமேஸான் பிரைம் வீடியோவில் இணைந்துள்ள அனைத்து சர்வதேச நேயர்ளுக்கும் ஏற்றவாறு வடிவமைத்துள்ளோம்” என்று கூறினார்.

வெள்ளை ராஜா குறித்து

வடசென்னையின் மையத்தில் அமைந்துள்ளதொரு பிரபலமான லாட்ஜ், பாவா லாட்ஜாகும்.

இந்த லாட்ஜில் தங்கி, பணையக் கைதி சூழலில் இருக்கும்நபர்களைச் சுற்றி இக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

பிரலமானதொரு போதை மருந்து கடத்தல் கும்பலின் தலைவனான தேவா ஒரு கொக்கைன் (Cocaine)சோதனையைத் தொடர்ந்து அங்கு ஒளிந்திருக்கிறான்.

அவன் காவல்துறையின் மற்றும் தனது எதிரிகளின் தடைகளை மீறி தனது பொருட்களுடன் தப்பிக்கவேண்டும்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸால் தயாரிக்கப்பட்டு, குகன் சென்னியப்பன் அவர்களால் இயக்கப்பட்டுள்ள இத்தொடரில், பாபி சிம்ஹா மற்றும் பார்வதிநாயர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.