அமேசானில் வெளியானது அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா த‌ ரைஸ் பார்ட் 1’

125

திரைப்பட ரசிகர்களுக்கும், அல்லு அர்ஜுன் ரசிகர்களுக்கும் மறக்கமுடியாத அனுபவத்தை வழங்க அமேசான் பிரைம் வீடியோ தயாராகிவிட்டது.

அல்லு அர்ஜுனின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘புஷ்பா த ரைஸ் பார்ட் 1’ தற்போது தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டிருக்கிறது.

‘புஷ்பா’ படத்தின் வெளியீட்டை குறிக்கும் வகையில் உலகளாவிய ரசிகர்களுக்காக அமேசான் பிரைம் வீடியோ ஒரு பிரத்யேக முன்னோட்டத்தை வெளியிட்டிருக்கிறது.

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்கும் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘புஷ்பா த ரைஸ் பார்ட் 1’.

இதில் அல்லு அர்ஜுன் செம்மர கடத்தலில் ஈடுபட்டிருக்கும் புஷ்பராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படம் தற்போது தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியிருக்கிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம் செட்டி மீடியா மூலம் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை இயக்குநர் சுகுமார் எழுதி இயக்கியிருக்கிறார்.

இந்த அதிரடி ஆக்சன் நாடகத்தில் நடிகை ரஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார்.

மலையாள நடிகரான பகத் பாசில் இந்த ‘புஷ்பா’ படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் வில்லனாக அறிமுகமாகியிருக்கிறார்.