பிகில்…. வெறும் தலைப்பு மட்டும்தானா?

102

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் பிகில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது முதல் சமூகவலைத்தளங்களில் பிகில்தான் டிரெண்டிங்.

நயன்தாரா, கதிர், யோகி பாபு ஆனந்தராஜ், ஜாக்கி ஷெராஃப், தேவதர்ஷினி, வர்ஷா பொம்மல்லா உட்பட பலர் நடிக்கும் பிகில் படத்தின், ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்ட சில மணி சேரத்தில் செகண்ட் லுக்கும் தொடர்ந்து தேர்ட் லுக்கும் வெளியானது.

ஜூன்-22 விஜய்யின் பிறந்தநாள் என்பதால் பிகில் போஸ்டர்கள் விஜய் ரசிகர்களுக்கு பிறந்தநாள் ட்ரீட்டாக அமைந்தன.

‘பிகில்’ என்ற தலைப்பு விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது ஒருபக்கம் இருக்க, பிகில் என்ற தலைப்புக்கான காரணம் தற்போது கசிந்துள்ளது.

இந்தப்படத்தில் அப்பா மகன் என விஜய் மாறுபட்ட இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.

மகனின் பெயர் பெயர் மைக்கேல். அப்பாவின் பெயர் பிகில். அதன்காரணமாகவே பிகில் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

விஜய்யும், அட்லியும் இணைந்த ‘தெறி’ படம் சுமாரான வெற்றியையே பெற்றது.

ஆனால், ‘மெர்சல்’ படம் வசூலில் சாதனை படைத்தது.

மெர்சல் படத்தைப்போல் ‘பிகில்’ படமும் வசூலில் சாதனை படைக்கும் என்று நம்புகின்றனர் விஜய் ரசிகர்கள்.