வெளியீட்டுக்கு தயாரான பாவனாவின் படம்

9

இந்திய திரையுலகில் 23 ஆண்டுகளாக தனது அபாரமான நடிப்பு திறமையாலும், விடாமுயற்சியாலும் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவர் பாவனா.

பல்வேறு திரைப்படங்கள், பிரபல நடிகர்களுடன் பணியாற்றி இருக்கும் பாவனா தனது 90வது மைல்கல் திரைப்படமான ‘அனோமி: தி ஈக்வேஷன் ஆஃப் டெத்’ மூலம் மீண்டும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்த உள்ளார்.

‘நம்மல்’ திரைப்படம் மூலம் அறிமுகமான பாவனா, இதுவரை பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வரிசையில், `அனோமி’ படத்தில் அவர் தனது திரையுலக வாழ்க்கையின் மிகக் கடினமும், ஆழமும் கொண்ட பாத்திரங்களில் ஒன்றை ஏற்று நடித்துள்ளார்.

இந்த திரில்லர் படத்தை அறிமுக இயக்குநர் ரியாஸ் மரத் எழுதி, இயக்கியுள்ளார். வழக்கமான குற்றவியல் திரில்லர் எல்லைகளைத் தாண்டி, பேரலெல் இன்வெஸ்டிகேஷன் எனும் தனித்துவமான கதை சொல்லும் முறையில், உணர்ச்சிகளும் பதற்றமும் கலந்த திரைக்கதை அமைந்துள்ளார்.

படத்தில் பாவனா, ‘சாரா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். உணர்ச்சி ஆழமும், புத்திசாலித்தனமும் கொண்ட ஒரு தடயவியல் நிபுணராக அவரது நடிப்பு முக்கிய களமாக இருக்கும்.