மீண்டும் தள்ளிப்போகிறதா பாஸ்கர் ஒரு ராஸ்கல்?

885

இயக்குநர் சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி கதாநாயகனாக நடித்துள்ள படம் – ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’.

இவருக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ள இந்தப்படத்தில் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ,பேபி நைனிகா ஆகியோருடன், வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானி நடித்துள்ளார்.

‘வர்ஷினி மூவீஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை ‘பரதன் பிலிம்ஸ்’ வாங்கியுள்ளது.

பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்துக்கு பலதடவை ரிலீஸ் தேதி குறிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டநிலையில் தற்போது மே 11 ஆம் தேதி ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.

லேட்டஸ்ட் தகவலின்படி… திட்டமிட்டபடி மே 11 ஆம் தேதி பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் வெளியாவது சந்தேகம்தான் என்கின்றனர் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள்.

பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் தயாரிப்பாளரான அடிதடி முருகன் ஏற்கனவே தயாரித்த ஜன்னல் ஓரம் படம் தொடர்பாக விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் அதிபர்களுக்கும் சில கோடிகள் பாக்கி வைத்திருக்கிறாராம். அதோடு, பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்துக்கு வாங்கிய பைனான்ஸ் சேர்த்து சுமார் 10 கோடியை அவர் கொடுத்தால் மட்டுமே இந்த வாரம் படம் திரைக்கு வரும் என்கின்றனர்.

தமிழ்நாடு தியேட்டரில் ரைட்ஸை பரதன் பிலிம்ஸ் வாங்கியுள்ளது. ஆனால் சாட்டிலைட், ஓவர்சீஸ் போன்ற மற்ற ஏரியாக்கள் பிசினஸ் ஆகவில்லை..

தயாரிப்பாளர் முருகன் செட்டில் பண்ண வேண்டிய 10 கோடியை பரதன் பிலிம்ஸ் கொடுக்க முன்வந்தால் மட்டுமே மே 11 அன்று பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைக்கு வரும்.

இதற்கிடையில் மே 11 அன்று இரவுக்கு ஆயிரம் கண்கள், இரும்புத்திரை ஆகிய படங்கள் வெளிவருவதால் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்துக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்பில்லை என்றும் டிரேடிங் வட்டாரத்தில் சொல்கிறார்கள்.

இதன் காரணமாக பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் மீண்டும் தள்ளிப்போகவும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

– ஜெ.பிஸ்மி