பாரதிராஜா பல்டியடித்த காரணம் என்ன?

115

தமிழ்த்திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் பொதுக்குழு சமீபத்தில் நடைபெற்றபோது எவ்வித முன்அறிவிப்பும் இல்லாமல் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார் பாரதிராஜா.

அப்போது தலைவர் பதவியை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்ட பாரதிராஜா தனது இயக்குனர் சங்க தலைவர் பதவியை இன்று திடீரென்று ராஜினாமா செய்துள்ளார்.

‘‘கடந்த மாதம் நடைபெற்ற நமது சங்க பொழுக்குழுவில் நமது சங்க நிர்வாகிகள் இயக்குனர்கள், இணை துணை, உதவி இயக்குனர்கள் பேராதரவுடன் போட்டியின்றி என்னை தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு மிகவும் நன்றி! ஆனால் தேர்தலில் போட்டியிடாமல் ஒரு பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் அதனால் ஏற்படும் சங்கடங்களை நான் நன்கு உணர்ந்துள்ளேன்.

ஆகையால் ஜனநாயக முறைப்படி தலைவரை தேர்ந்தெடுக்க வசதியாக எனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முன் வந்துள்ளேன். ஒரு மூத்த இயக்குனராக நமது சங்க வளர்ச்சிக்கும், உறுப்பினர்களின் எதிர்காலத்துக்கும் எனது வழிகாட்டுதலும், பேரன்பும் என்றும் தொடரும்…’’ என்று ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார்.

திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராக பாரதிராஜா இன்னும் பதவியே ஏற்கவில்லை என்பது ஒருபக்கம் இருக்க, அவருடைய ராஜினாமாவுக்கான காரணம் குறித்து திரையுலகில் பல காரணங்கள் சொல்லப்படுகிறது.

அவரை தலைவராக தேர்வு செய்ததை எதிர்த்து சிலர் கோர்ட்டுக்கு செல்ல இருப்பதை அறிந்தே பாரதிராஜா இப்படியொரு முடிவை எடுத்ததாக சொல்லப்படுகிறது.

இன்னொருபக்கம், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விரைவில் நடைபெற உள்ள தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளார். அதனாலேயே பாரதிராஜா தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

மொத்ததில் என்னமோ நடக்குது..

பாரதிராஜழவின் இந்த முடிவின் காரணமாக திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கான புதிய தலைவரை தேர்ந்தெடுக்க விரைவில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.