‘பெங்களூர் நாட்கள்’ படத்தைத் திரையிட ஆர்வம் காட்டும் தியேட்டர்காரர்கள்..!

702

மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்த படம் பெங்களூர் டேஸ்.

அஞ்சலி மேனன் என்ற பெண் இயக்குநர் இயக்கிய இந்தப் படத்தை மற்ற மொரிகளில் ரீமேக் செய்ய கடும்போட்டி ஏற்பட்டது.

தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யும் உரிமயைப் பெற்ற ‘பி.வி.பி.சினிமா’ நிறுவனம் தமிழில் ‘பெங்களூர் நாட்கள்’ என்ற பெயரில் தயாரித்துள்ளது.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளதால் தெலுங்கில் பல வெற்றிப் படங்களை இயக்கிய ‘பொம்மரிலு’ பாஸ்கரை இயக்குநராக தேர்வு செய்தது பிவிபி.

தெலுங்கில் பிரபல இயக்குநராக இருந்தாலும் இயக்குநர் பாஸ்கர் தமிழர்.

எனவே இந்த இரண்டு மொழிப்படத்தை இயக்க பாஸ்கர்தான் சரியான சாய்ஸ் என பிவிபி நிறுவனத்தின் நம்பிக்கையை காப்பாற்றும்வகையில் ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா, சமந்தா, பார்வதி, லட்சுமி ராய் என மிகப்பெரிய நட்சத்திரப்பட்டாளத்தை வைத்து ‘பெங்களூர் நாட்கள்’ படத்தை சிறப்பாக எடுத்திருக்கிறாராம்.

‘பெங்களூர் டேஸ்’ படத்திற்கு இசை அமைத்த கோபி சுந்தரே இப்படத்துக்கும் இசை அமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான ‘பெங்களூர் நாட்கள்’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலருக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்து இப்படம் மீது பெரும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

‘பெங்களூர் நாட்கள்’ திரைப்படம் பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி ரிலீசாவிருப்பதால் நேற்றைய முன்தினம் தணிக்கைக்கு சென்றது.

‘பெங்களூர் நாட்கள்’ படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு எந்த ‘கட்’டும் சொல்லாமல் அனைவரும் பார்க்க கூடிய படம் என்று சொல்லப்படுகிற ‘யு’ சான்றிதழை வழங்கியிருக்கிறார்கள்!

‘பெங்களூர் நாட்கள்’ படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்ததும் தியேட்டர்காரர்கள் ‘பெங்களூர் நாட்கள்’ படத்தைத் திரையிட ஆர்வம் காட்டி வருகிறார்களாம்.

வரிவிலக்கு பணத்தை பங்கு போட்டுக்கொள்ளலாமே?