ஆர்யா, பாபி சிம்ஹா, ‘பாகுபலி’ ராணா, ஸ்ரீதிவ்யா, பார்வதி, சமந்தா உடன் செல்ஃபி எடுக்கணுமா?

1133


‘பி.வி.பி. சினிமா’ நிறுவனத்தின் தயாரிப்பில், ‘பொம்மரில்லு’ பாஸ்கர் இயக்கத்தில், ஆர்யா, பாபி சிம்ஹா, ‘பாகுபலி’ ராணா, ஸ்ரீதிவ்யா, பார்வதி, சமந்தா என நட்சத்திர பட்டாளமே நடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும், ‘பெங்களூரு நாட்கள்’ திரைப்படம், இளைஞர்களின் மனதை அதிகம் கவர்ந்திருக்கிறது.

திரைப்படத்தில் இடம்பெறும், இளமை துள்ளல் நிறைந்த ‘கசின்ஸ்’ உறவுகளுக்கிடையே நிகழும் குறும்புகளுக்கு, திரையரங்கில் சிரிப்பலை கேட்டுக்கொண்டே இருக்கிறது.

படம் பார்க்கும் அனைவரும் ‘பெங்களூரு நாட்கள்’ படம், தன்னையும், தன் ‘கசின்ஸ்’ உறவுகளையும் பிரதிபலிப்பதாக நெகிழ்கிறார்கள்.

நெருக்கமானநண்பர்களைப் போல அனைவரின் வாழ்விலும் முக்கியமான இடம் வகிக்கும் ‘கசின்ஸ்’ உறவுகளைப் பற்றிய இத்திரைப்படத்தின் வெற்றி, உறவுகளின் வெற்றியாக அமைந்திருக்கிறது.

அதை கொண்டாடும் விதத்தில், படத்தைத் தயாரித்துள்ள பி.வி.பி நிறுவனம், selfi with cousin’s என்ற போட்டியை அறிவித்துள்ளது.

உங்கள் ‘கசின்ஸ்’களுடன், ‘பெங்களூரு நாட்கள்’ திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் திரையரங்க்கு செல்லுங்கள்.

அங்கே உள்ள ‘பெங்களூரு நாட்கள்’  திரைப்படத்தின் போஸ்டர் அருகே நின்று, உங்கள் ‘கசின்ஸ்’ உறவுகளுடன் ஒரு ’செல்ஃபி’ புகைப்படம் எடுங்கள்.

அதோடு, உங்களின் ‘கசின்ஸ்’ உறவுகளின் சிறப்பு தன்மையை 50 வார்த்தைகளுக்குள் எழுதி, Bangalorenaatkal@gmail.com என்ற மின்னஞ்சல் (email) முகவரிக்கு அனுப்ப வேண்டுமாம்.

மறக்காமல் உங்களின் தொலைபேசி எண்ணையும், முகவரியையும் குறிப்பிட வேண்டுமாம்.

selfi with cousin’s போட்டியில் தேர்ந்தெடுக்கப்படுவர்கள், ’பெங்களூரு நாட்கள்’ திரைப்படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்களுடன், நேரடியாக கலந்துரையாடி ‘செல்ஃபி’ புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம்.

நிகழ்ச்சியில் நீங்கள் அனுப்பிய ’செல்ஃபி’ புகைப்படத்தில் உள்ள ‘கசின்ஸ்’ மட்டுமே கலந்துகொள்ள முடியும்.

பிவிபி படத்தயாரிப்பு நிறுவனத்தின் முடிவே இறுதியானது என்பது இந்த போட்டியின் conditions apply.