பாகுபலி – 2 படத்தை கைப்பற்றிய புதிய தயாரிப்பாளர்…!

477

உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்ற பாகுபலி படத்தின் இரண்டாம் பாகமான பாகுபலி – 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

விரைவில் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட்புரடக்ஷன்ஸ் பணிகள் துவங்க உள்ள பாகுபலி-2 படம் அடுத்த வருடம் ஏப்ரல் 28 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் வெளியிடப் படுகிறது.

இந்திய இயக்குநர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகி உள்ள பாகுபலி – 2 படத்தில் பிரபாஸ், ராணா, சத்யராஜ், நாசர், ரம்யாகிருஷ்ணா, அனுஷ்கா, தமன்னா என முதல் பாகத்தில் நடித்த நட்சத்திரங்களே நடித்து வருகின்றனர்.

இவர்கள் தவிர புதிதான ஏராளமான நட்சத்திரகளும் நடித்துள்ளனர்.

IMG_1201இந்த படத்தின் தமிழ்நாடு உரிமையை வாங்க பிரபல தயாரிப்பாளர்கள் மத்தியில் கடும்போட்டி நிலவியதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை கே.புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்.என்.ராஜராஜன் என்பவர் வாங்கியிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் தமிழகத்தில் வெளியிடும் உரிமையைப்பெற்றுள்ள கே.புரொடக்ஷன்ஸ் பட நிறுவனமே தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளிநாடுகளிலும் வெளியிடுகிறது.

பாகுபலி – 2 படத்தை வாங்கி வெளியிடுவதுடன் கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனம் படத்தயாரிப்பிலும் இறங்குகிறது.

ராணா, சத்யராஜ், ரெஜினா, நாசர், கருணாஸ் நடிக்க சத்யசிவா இயக்கத்தில் யுவன்சங்கர் ராஜா இசையில் மடைதிறந்து என்ற படத்தைத் தயாரிக்கிறது.

இதே படத்தை 1945 என்ற பெயரில் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் மிக பிரமாண்டமாக பல கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாக்குகிறது.

பாகுபலி – 2 – மடைதிறந்து – 1945 என்று மிக பிரமாண்டமான படங்களின் மூலம் திரைத்துறைக்கு வந்திருக்கும் கே.புரொடக்ஷன்ஸ் எதிர்காலத்தில் இன்னும் பல பிரமாண்டமான படங்களை தயாரிக்க உள்ளது.