ரசிகர்களுக்கு திகில் படம்… விக்னேஷுக்கு திருப்புமுனை படம்!

Avan Aval Stills 001

காயன்ஸ் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக வி.உமாமகேஸ்வரி,வி.சுதா விஸ்வநாதன் தயாரிக்கும் படத்திற்கு அவன் அவள் என்று பெயரிட்டுள்ளனர்.

விக்னேஷ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் கதாநாயகிகளாக தேவிகா மாதவன், சந்திரிகா இருவரும் நடிக்கிறார்கள்.

மற்றும் கணபதி, ஸ்வப்னம், சச்சு, பாவாலட்சுமணன், செவ்வாளை, ஆதிசிவன், சுப்புராஜ், சின்ராசு, மணிகுட்டி, என்.சி.பி.விஜயன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – ரவி சீனிவாசன்.

இசை – கார்த்திக் ராஜா

பாடல்கள் – சினேகன், பா.விஜய்

கலை – ஆரோக்கியராஜ்

நடனம் – கூல் ஜெயந்த், கருணாகரன்

ஸ்டன்ட் – தவசிராஜ்

எடிட்டிங் – பேட்ரிக்

தயாரிப்பு – காயன்ஸ் பிக்சர்ஸ் வி. உமாமகேஸ்வரி

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராம்கிரீஷ் மிரினாளி.

அவன் அவள் படம் பற்றி இயக்குனர் ராம்கிரீஷ் மிரினாளி என்ன சொல்கிறார்?

“இப்பொழுது பல குடும்பங்களில் நடக்கும் உண்மை சம்பவங்கள்தான் இப்படத்தின் கதை.

கணவன் , மனைவி எப்படி புரிதலுடன் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு விஷயத்திலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அன்புடன் வாழ வேண்டும்.

விட்டுக் கொடுக்காமல் அது உன்னை விட சிறந்தது இது உன்னை விட சிறந்தது என்று பேசி மனதை மாற்றி வாழ்ந்து கொண்டிருகிறார்கள்.

அப்படி வாழ்ந்த ஒருவனின் வாழ்க்கைதான் இந்த படத்தின் கதை.

கணவன் மனைவி எப்படி வாழவேண்டும் என்பதை இந்த படத்தில் திரில்லர் கலந்து உருவாக்கியுள்ளோம்.

நடிகர் விக்னேஷுக்கு இது ஒரு திருப்புமுனை படமாக இருக்கும்.

அவன் அவள் படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் கொடைக்கானலிலும் 20 சதவீதம் சென்னையிலும் நடைபெற்றுள்ளது.

படத்தின் அனைத்து கட்ட வேலைகளும் முடிந்து விரைவில் திரைக்கு வர இருக்கிறது.” என்கிறார் இயக்குனர் ராம்கிரிஷ் மிரினாளி.