“அதி மேதாவிகள்” – பாக்யராஜின் உதவியாளர் இயக்கும் படம்

1290

“வாழ்கையில் நிறைய மேதாவித்தனமான ஆட்களை நாம் சந்திப்பதுண்டு. அதில் இரண்டு அதி மேதாவியின் காதல் கதைதான் “அதி மேதாவிகள்”.

ஒவ்வொரு காலேஜ் ஸ்டுடென்ட் வாழ்கையிலும் இப்படியான சம்பவங்கள் நடப்பதுண்டு.

இந்த காதலர்களின் வாழ்க்கையில் நடந்ததும் சுவாரசியமான சம்பவங்கள் தான். இதை காமெடி கலந்து கதையாக உருவாக்கியுள்ளேன்”

– என்கிறார், டைரக்டர் ரஞ்சித் மணிகண்டன்.

இவர் பாக்யராஜின் உதவியாளர். மேலும் பல விளம்பர படங்களை இயக்கியுள்ள அனுபவத்தில் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். கதை, திரைக்கதையும் இவரே.

கல்லூரி வினோ வசனம் எழுதுகிறார்.

‘சலீம்’ பட ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்ய, சிவராஜ் கலை அமைக்க, பெர்லி சிங் தயாரிக்கிறார்.

2013 – 2014 ம் ஆண்டுக்கான சிறந்த எண்டர்டெயின்ட்மென்ட் ஏஜென்சி பட்டம் பெற்ற அப்சலுட் என்ற கம்பனி முதன் முதலாக அப்சலுட் பிக்சர்ஸ் சார்பில் இப்படம் மூலம் பட தயாரிப்பில் களம் இறங்குகிறது.

இரண்டு அதி மேதாவிகளாக, சன் மியூசிக் வீடியோ ஜாக்கியான சுரேஷ் ரவி (அறிமுகம்), இஷாரா நாயர் நடிக்கிறார்கள்.

மேலும் கலாபவன் மணி,   லிவிங்ஸ்டன், தம்பி ராமையா, ரேணுகா, ஜெகன், மனோபாலா மற்றும் பலர்  நடிக்கின்றனர்…

இதன் படபிடிப்பு பிப்ரவரி மாதம் 27- ம் தேதி சென்னையில் ஆரம்பமாகி தொடர்ந்து சென்னையிலும், கேரளாவிலும் நடைபெறுகிறது.