ஆர்யா – சாயிஷா ஜோடி நடிக்கும் படம்

150

ஜெயம்ரவி நடித்த மிருதன், ‘டிக் டிக் டிக்’ படங்களை தொடர்ந்து, ஆர்யா நடிப்பில் ஒரு படத்தை இயக்குகிறார் சக்தி சௌந்தர்ராஜன்.

இந்த படத்தின் கதை விவாதம் சில மாதங்களாக நடந்து வந்தது.

சில தினங்களுக்கு முன் அந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகினது.

‘டெடி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் கரடி முக்கிய வேடத்தில் நடிக்கிறது.

இந்த படத்தை ஆர்யா நடிப்பில் ‘கஜினிகாந்த்’ படத்தை தயாரித்த ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்திற்கு இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜனின் ஆஸ்தான இசை அமைப்பாளரான டி.இமான் இசை அமைக்கிறார்.

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகைகள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது!

குறிப்பாக கதாநாயகியாக யார் நடிக்கிறார் என்பதை சஸ்பென்சாக வைத்திருக்கிறார்கள்.

ஆர்யாவுக்கு மனைவியான சாயிஷாதான் டெடி படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

‘கஜினிகாந்த்’ படத்தை அடுத்து இருவரும் இணைந்து நடிக்கும் படம் இது.

காப்பான் படத்திலும் இருவரும் நடிக்கின்றனர். ஆனால் அதில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் சாயிஷா.