ஆபாசப்பட இயக்குநர் படத்தில் அரவிந்த்சாமி

67

‘ஹரஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ போன்ற அடல்ட் கண்டன்ட் என்கிற ஆபாசப்படத்தை இயக்கியவர் சந்தோஷ் பி.ஜெயகுமார்.

அடுத்து ஆர்யா நடித்த ‘கஜினிகாந்த்’ படத்தை இயக்கினார்.

இவை தவிர ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ படத்தின் தெலுங்கு ரீமேக்கையும் இயக்கினார். அந்தப்படமும் தோல்வியடைந்தது.

இதற்கிடையில் தமிழில் மேலும் இரண்டு அடல்ட் கண்டன்ட் படங்களை இயக்கினார்.

இந்த படங்கள் பிசினஸ் ஆகவில்லை. எனவே இந்த இரண்டு படங்களையும் தயாரிப்பாளர் கிடப்பில் போட்டுவிட்டார்.

அதன் பிறகு தன்னுடைய பெயரை சான்டி என்று மாற்றிக்கொண்டு கௌதம் கார்த்திக்கை வைத்து ஒரு படத்தை இயக்கவிருந்தார். அந்தப்படம் பூஜைபோட்டதோடு நின்றுபோனது.

எனவே இனியும் இந்தப் படங்களை நம்பி உட்கார்ந்தால் வேலைக்கு ஆகாது என்பதை புரிந்து கொண்டார் சந்தோஷ் பி.ஜெயகுமார்.

தொடர்ந்து பல படங்களை தயாரித்து வரும் எட்செட்ரா எண்டர்டெயின்ட்மென்ட் மதியழகனிடம் கதை சொன்னார்.

அவருக்கு கதை பிடித்துப்போக, அரவிந்த்சாமி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்குகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படம் சந்தோஷ் பி.ஜெயகுமாரின் வழக்கான ஆபாச ஃபார்முலாவிலிருந்து மாறுபட்டு டிடெக்டிவ் த்ரில்லர் ரக படமாக உருவாகிறது.

இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார்.