பிசியான ஹீரோக்களின் லிஸ்டில் அருண்விஜய்

126

மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து கடந்த வாரம் வெளியான ‘தடம்’ வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அந்தப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அருண் விஜய் அடுத்து நடிக்க இருக்கும் மற்றொரு படத்தின் அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

அறிவழகன் இயக்கத்தில் ‘குற்றம்-23’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த அருண் விஜய் மீண்டும் இந்த புதிய படத்திலும் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார்.

இயக்குநர் ஆர். கண்ணன் மற்றும் மிலன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கோபிநாத் நாராயணமூர்த்தி இந்த படத்தை இயக்குகிறார்.

நகரத்தில் தொடர்ச்சியாக நடக்கும் மர்மமான கொலைகளை சாமர்த்தியமாக புலனாய்வு செய்து கண்டு பிடிக்கும் போலீஸ் அதிகாரியின் வேடமாம் அருண் விஜய்க்கு!

பெயரிடப்படாத இந்த படத்திற்கான மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விரைவில் துவங்க உள்ளது.

இந்த படம் தவிர குத்துச்சண்டை வீரராக அருண் விஜய் நடிக்கும் ‘பாக்ஸர்’ படத்தின் படப்பிடிப்பும் விரைவில் துவங்க இருக்கிறது.

தடம் படத்தின் வெற்றி அருண்விஜய்யை பிசியான ஹீரோக்களின் பட்டியலில் சேர்த்துவிட்டது.