போலீஸ் காவலில் இருந்து நடிகர் அருண் விஜய் தப்பி ஓட்டமா…? நள்ளிரவில் நடந்தது என்ன?

816

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற நடிகை ராதிகாவின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தன் மனைவியுடன்  கலந்து கொண்ட நடிகர் அருண் விஜய், அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு போதையிலேயே அதிவேகமாக காரை  ஓட்டிச்சென்று, நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையம் அருகே பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸின் வாகனம்  மீது மோதி விபத்து ஏற்படுத்தினார்.

விசாரணையில், அளவுக்கு அதிகமாக குடிபோதையில் காரை ஓட்டியது தெரியவந்ததால், சென்னை பாண்டிபஜார் போலீசார், அருண் விஜய்யை கைது செய்துள்ளனர்.

குடிபோதையில் வாகனம் ஓட்டியது மற்றும் விபத்து ஏற்படுத்தியது ஆகிய இருபிரிவுகளின் அவர் மீது  கீழ் வழக்கு பதிவு செய்ததோடு, அவரது காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர் என்று தகவல் வெளியானது.

இதற்கு மாறாக போலீஸ் காவலில் இருந்து நடிகர் அருண் விஜய் தப்பி ஓடிவிட்டதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது!

தன் மகன் அருண்விஜய் குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதால் பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட தகவல் அறிந்து அருண்விஜய்யின் தகப்பனாரும் நடிகருமான விஜயகுமார் காவல் நிலையத்துக்கு வந்தார்.

அருண்விஜய் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதால் அவரை மாஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர் படுத்தி அபராதம் கட்டி காரை எடுத்து செல்லும் படி போலீசார் கூறி இருந்தனர்.

இதற்கிடையே பாண்டிபஜார் ஸ்டேஷனுக்கு செல்லும் வழியில் அருண்விஜய் தப்பி ஓடி விட்டாராம்.

அவரை காவல்துறையினர் தற்போது தேடி வருகிறார்களாம்.

“அருண்விஜய் மீது சாதாரண பிரிவுகளிலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அபராதம் கட்டி செல்ல வேண்டியதுதான். ஆனால் அவரோ தன்னை கைது செய்துவிடுவார்களோ என பயந்து போலீசிடமிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுதான் பெரும் குற்றம். ஆகவே கடுமையான பிரிவுகளில் வழக்கு பதியப்படும். தானாகவே சிக்கலை அதிகமாக்கிக்கொண்டார் அருண்விஜய்” என்று காவல் துறை வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.

இதுதான் தனால் அவர்மீது கடுமையான வழக்கு பதியப்படும் அது அவருக்கு மேலும் சிக்கலை கொடுக்கும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.