சீனுராமசாமி இயக்கத்தில் அருள்நிதி

77

பரத்நீலகண்டன் இயக்கத்தில் ‘K-13’, ‘மாப்ள சிங்கம்’ படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார். அருள்நிதி.

இந்த படங்களை தொடர்ந்து சீனுராமசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் அருள்நிதி.

விஜய்சேதுபதி, விஷ்ணுவிஷால், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை இயக்கிய சீனுராமசாமி முதன்முறையாக அருள்நிதியுடன் இணைகிறார்.

இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘கண்ணே கலைமானே’ படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்திருந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து விஜய்சேதுபதி நடிப்பில் ‘மாமனிதன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் சீனுராமசாமி.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தநிலையில் என்ன காரணத்தினாலோ படபணிகள் முடங்கிக் கிடக்கின்றன.

இதற்கிடையில் அருள்நிதிக்கு ஒரு கதையை சொல்லி ஓகே பண்ணி வைத்திருந்தார்.

‘கண்ணே கலைமானே’ படத்தை அடுத்து சீனுராமசாமி இயக்த்தில் மீண்டும் நடிக்க கால்ஷீட் தருவதாக சொன்ன உதயநிதி, என்ன காரணத்தினாலோ வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

இதற்குமேலும் அவருக்காக காத்திருப்பது வீண்வேலை என்பதால் ஏற்கனவே ஓகே பண்ணி வைத்திருந்த அருள்நிதி ப்ராஜக்ட்டை ஆரம்பித்துவிட்டார் சீனுராமசாமி.

சீனுராமசாமியும் அருள்நிதியும் முதன் முதலாக இணையும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை எச்சரிகை இது மனிதர்கள் நடமாடும் இடம் படத்தை தயாரித்த ‘டைம்லைன் சினிமாஸ்’ நிறுவனம் சார்பில் சுந்தர் அண்ணாமலை தயாரிக்கிறார்.

இந்நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பு இது.