தணிக்கையில் U/A சான்றிதழ் பெற்ற அரண்மனை-3 படம்

28

சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் அரண்மனை-3 படத்தின் தணிக்கை நிறைவாக முடிந்தது.

தணிக்கை குழு படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது.

அரண்மனை 3 திரைப்படம் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரிக்க சி.சத்யா இசையமைக்கிறார்.

குடும்பங்கள் சிரித்து கொண்டாடும் ஜனரஞ்சகமான படமான இப்படத்தில் ஆர்யா, ராஷிக்கண்ணா, சுந்தர்.சி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, விவேக், யோகி பாபு, ஆண்ட்ரியா , மனோபாலா,சம்பத், சாக்‌ஷி அகர்வால், மதுசூதன ராவ், வின்சென்ட் அசோகன், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:

இயக்கம் : சுந்தர் .சி

தயாரிப்பு நிறுவனம் : அவ்னி சினிமேக்ஸ்

தயாரிப்பாளர் : குஷ்பு சுந்தர்

ஒளிப்பதிவு : யுகே செந்தில்குமார்

இசை : சி சத்யா