ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாட விக்ரம் கையாண்ட வழி

29

டிமாண்ட்டி காலனி, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய படங்களை இயக்கியவர் அஜய்ஞானமுத்து.

இமைக்கா நொடிகள் படம் வெற்றியடைந்ததும் விக்ரமை பார்த்து ஒரு கதை சொன்னார். அவர் சொன்ன கதை பிடித்துப்போக, தயாரிப்பாளர் லலித்திடம் அனுப்பி வைத்தார்.

அவருக்கும் அஜய்ஞானமுத்து சொன்ன கதை பிடித்துப்போனது.

அதன் பிறகு கால்ஷீட் தராமல் விக்ரம் வருடக்கணக்கில் இழுத்தடிக்க, பொறுமையாக காத்திருந்தார் அஜய்ஞானமுத்து.

கடாரம் கொண்டான் படத்தை அடுத்து அஜய்ஞானமுத்து இயக்கத்திலதான் நடிக்க இருக்கிறார் விக்ரம்.

இந்த படம் விக்ரமுக்கு 58-ஆவது படம்.

இந்த படத்தை லலித்தின் ‘7 ஸ்கிரீன் ஸ்டுடியோ’ நிறுவனமும் ‘VIACOM 18 STUDIOS’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.

ஏற்கெனவே ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘ஐ’, மணிரத்னம் இயக்கிய ‘இராவணன்’ ஆகிய படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

‘ஐ’, ‘இராவணன்’ ஆகிய படங்களில் விக்ரமுடன் இணைந்து பணியாற்றிய ஏ.ஆர்.ரஹ்மான் இப்போது மீண்டும் விக்ரமுடன் இணைந்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதும் அவரது இசையில் தான் பாட வேண்டும் என்ற ஆசையை இயக்குநர் அஜய் ஞானமுத்துவிடம் வெளிப்படுத்தியுள்ளார் விக்ரம்.

சரியான சந்தர்ப்பத்தில் இந்த விஷயத்தை ஏ.ஆர்.ரஹ்மானின் காதில் போட்டு தன்னை பாட அழைக்க வைக்க வேண்டும் என்ற அசைன்மெண்ட்டை இயக்குநருக்குக் கொடுத்துள்ளார் விக்ரம்.

ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கிறது என்பது கூடுதல் தகவல்.