காதலர் ஜெய்க்கு அஞ்சலி கொடுத்த இன்ப அதிர்ச்சி…

361

நடிகை அஞ்சலியும், நடிகர் ஜெய்யும் காதலித்து வருகின்றனர் என்றும், கடந்த சில மாதங்களாக இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார் என்றும் படத்துறையில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

இந்த தகவலை அஞ்சலி, ஜெய் இருவருமே தங்களுடைய நண்பர்கள் வட்டாரத்தில் உறுதி செய்துள்ளனர்.

இதற்கிடையில், தற்போது அஞ்சலியும், ஜெய்யும் பலூன் என்ற படத்தில் ஜோடியாக நடித்து வருகின்றனர்.

ஜனனி அய்யர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் பலூன் படத்தை சினிஷ் என்ற புதியவர் இயக்குகிறார்.

யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் பலூன் படத்தை,   ’70 எம் எம்’ நிறுவனத்தின் சார்பில்  டி.என். அருண் பாலாஜி – கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் ‘பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்’ தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில்  திலீப் சுப்பராயன் ஆகியோர் இணைந்து  தயாரிக்கின்றனர். பலூன் படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் ‘ஆரா சினிமாஸ்’ மகேஷ் கோவிந்தராஜ் வாங்கி இருக்கிறார்.

இந்நிலையில் பலூன் படப்பிடிப்பு தளத்தில்,  ஒட்டுமொத்த படக்குழுவினரோடும் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார் ஜெய்.

ஜெய் பிறந்தநாள் கொண்டாடிய அன்று அவருக்கும் மற்றும் படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும்விதமாக, பலூன் படத்தின் கதாநாயகி அஞ்சலி  திடீர் விசிட் அடித்து ஜெய்யை வாழ்த்தினார்.

அவருடைய வருகையை யாரும் எதிர்பார்க்கவில்லையாம்.

ஜெய்க்கு ஆச்சரியம் கொடுக்கும் வகையில் பிறந்த நாள் கேக்கை, ஹெலிகேம் எனப்படும் பறக்கும் கேமராவில் கொண்டு வந்தார் இயக்குநர் சினிஷ்.

படக்குழுவினர் அனைவரும் ஜெய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.