அஞ்சலி முஸ்லீமாக மதம் மாறுகிறாரா? அல்லது ஜெய் மீண்டும் இந்துவாகப்போகிறாரா? Comments Off on அஞ்சலி முஸ்லீமாக மதம் மாறுகிறாரா? அல்லது ஜெய் மீண்டும் இந்துவாகப்போகிறாரா?

திரையுலகில் இணைந்து பணியாற்றும் நடிகரும், நடிகையும் காதலிப்பதும், கல்யாணம் செய்து கொள்வதும் ஆச்சர்யமான விஷயமல்ல.

கடந்த காலங்களில் எத்தனையோ நட்சத்திர ஜோடிகளைக் கண்டிருக்கிறோம்.

ஆனால், சமீபத்தில் காதல் கிசுகிசுவில் பரபரப்பாக அடிபட்டு வரும் நடிகர் ஜெய் – நடிகை அஞ்சலியின் காதலை பத்தோடு பதினொன்று என ஒதுக்கிவிட முடியாது.

இசையமைப்பாளர் தேவாவின் தம்பி சம்பத்தின் மகனான ஜெய் கடந்த வருடம் இஸ்லாமியராக மதம் மாறினார்.

மதம் மாறிய பிறகும் கூட சரக்கடிக்கும் பழக்கத்தை கைவிடாத ஜெய், தான் காதலித்த அஞ்சலியையும் கைவிடவில்லை என்பதுதான் ஆச்சர்யம்.

எங்கேயும் எப்போதும் படத்தில் இணைந்து நடித்தபோதே இருவருக்கும் காதல் தீ பற்றிக்கொண்டுவிட்டாலும், அதை வெளியே தெரியாத அளவுக்கு ரகசியம் காத்து வந்தனர்.

தன்னுடைய சித்தியின் கட்டுப்பாட்டில் இருந்த அஞ்சலி, ஒரு கட்டத்தில் அவரை விட்டுப் பிரிந்து ஹைதராபாத்தில் செட்டில் ஆனார்.

அதன் பிறகுதான் ஜெய் உடனான காதல் தீ கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது.

ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு வரும்போதெல்லாம் ஜெய்யின் வீட்டில் தங்க ஆரம்பித்த அஞ்சலி, ஒரு கட்டத்தில் ஜெய்யின் வீட்டிலேயே நிரந்தரமாக தங்க ஆரம்பித்தார்.

ஏறக்குறைய ஜெய்யும் அஞ்சலியும் திருமணம் செய்து கொள்ளாமலே சேர்ந்து வாழும் லிவிங் டு கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், அஞ்சலிக்கும் நடிகர் ஜெய்க்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

‘‘அஞ்சலிக்கும்,ஜெய்க்கும் வருகிற டிசம்பர் மாதம் திருப்பதி கோவிலில் திருமணத்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்” என்று அஞ்சலியின் உறவினர்கள் கூறியதாக தெலுங்கு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த செய்தி உண்மை என்றால், இஸ்லாமியராக மதம் மாறிய ஜெய் மீண்டும் இந்துவாக மாறினால்தான் சாத்தியம்.

தான் காதலித்த அஞ்சலியை கைப்பிடிப்பதற்காக, முஸ்லீம் மதத்தை துறந்து மீண்டும் தன்னுடைய தாய் மதத்துக்கே ஜெய் திரும்பப்போகிறாரா….

அல்லது, அஞ்சலியை முஸ்லீமாக மதம் மாற்றி திருமணம் செய்து கொள்ளப்போகிறாரா?

Previous ArticleNext Article

Editor Picks

Read previous post:
கும்கி – 2 படத்திலிருந்து டாக்டர் ராஜசேகர் மகள் அதிரடி நீக்கம் ஏன்?

Close