எமி ஜாக்சன் ‘எப்படிப்பட்ட’ நடிகை? அவரைப் பற்றிய ரகசியத்தை வெளியிட்ட ஹீரோ!

1555

மதராசப்பட்டணம், தாண்டவம் என இரண்டே இரண்டு படங்களில் நடித்தநிலையில் ஷங்கரின் இயக்கத்தில் நடிக்கும் அதிர்ஷ்டத்தைப் பெற்றவர் எமி ஜாக்சன்.

‘ஐ’ படத்தைத் தொடர்ந்து தற்போது வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாக விஐபி-2 படத்தில் நடித்து வருகிறார்.

அதோடு, மான்கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ‘கெத்து’ படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார் எமி ஜாக்ஸன்.

கெத்து படம் குறித்து பிரபல பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்சன் பற்றிய ஒரு கேள்விக்கு பதிலளிக்கும்போது, எமி ஜாக்ஸன் பற்றிய ஒரு ரகசியத்தையும் போட்டு உடைத்திருக்கிறார்.

திரை நட்சத்திரங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான சென்டிமென்ட் இருக்கும்.

அப்படியொரு சென்ட்டிமெண்ட் எமி ஜாக்ஸனுக்கும் உண்டாம்.

என்ன சென்டிமென்ட்?

எமி பிரியாணி சாப்பிடும்போது யார் கேட்டாலும் தன்னுடைய பிரியாணியை யாருக்கும் பகிர்ந்து கொடுக்க மாட்டாராம்.

அப்படி ஒரு பிரியாணி பிரியராம் அவர்.

அதிருக்கட்டும்.. பிரியாணியை தர மாட்டேன் என்று எமி சொன்னது சரக்கு அடிப்பதற்கு முன்பா? சரக்கு அடித்த பிறகா?