இளம் நடிகர் திரு வீர், தனது சமீபத்திய “ப்ரீ வெட்டிங் ஷோ ( Pre Wedding Show )” படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதில், சமீபத்தில் வெளியான சம்கிராந்திகி வஸ்துன்னாம் படத்தில் அற்புதமாக நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.
இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தினை, அறிமுக இயக்குநர் பரத் தர்ஷன் இயக்குகிறார். கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் மஹேஸ்வர் ரெட்டி மூலி தயாரிப்பில், “புரொடக்ஷன் நம்பர் 2 “ வாக இப்படம் உருவாகிறது.
இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பான சிவம் பஜே விமர்சகர்களிடம் பெரும் பாராட்ட்டுக்களைப் பெற்றது. தற்போது கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் இயக்குநர் பரத் தர்ஷன் எழுதியுள்ள மற்றொரு சுவாரஸ்யமான, பொழுதுபோக்கு கதையை தயாரிக்கவுள்ளது.
இந்த திரைப்படத்தின் பிரம்மாண்டமான துவக்க விழா இன்று ஹைதராபாத்தில், நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினரின் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
நடிகர் திரு வீர் , மசூடா மற்றும் ப்ரீ வெட்டிங் ஷோ போன்ற வித்தியாசமான கதைகளில் நடித்து புகழ் பெற்றவர். இப்போது அவர் நடிக்கும் இந்த புதிய படம் நகைச்சுவை கலந்த முழுமையான பொழுதுபோக்கு படமாக, பார்வையாளர்களுக்கு புதுமையான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்திற்காக திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர்.
ரசாகர் மற்றும் பொலிமேரா போன்ற படங்களில் பணியாற்றிய C. H. குஷேந்தர் ஒளிப்பதிவை கவனிக்கிறார். M. M. கீரவாணியின் நெருங்கிய துணை இசையமைப்பாளராக பணியாற்றிய பரத் மஞ்சிராஜு இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
பலகம் புகழ் திருமாலா M. திருப்பதி கலை இயக்குநராக இணைந்துள்ளார். கா படத்தின் ஸ்ரீ வரப்ரசாத் எடிட்டராக பணியாற்றுகிறார். ஸ்வயம்பு படத்தில் பணியாற்றி வரும் அனு ரெட்டி அக்கட்டி உடை வடிவமைப்பை கவனிக்கிறார். பிரபல பாடலாசிரியர் பூர்ணசாரி இந்த படத்திற்கான பாடல் வரிகளை எழுதுகிறார்.
இந்தப் படத்தின் புது படப்பிடிப்பு வரும் இந்த மாதம் 19ஆம் தேதி தொடங்குகிறது. படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியிடப்படுகிறது.
நடிகர்கள்
திரு வீர், ஐஸ்வர்யா ராஜேஷ்
தொழில் நுட்பக் குழு
தயாரிப்பாளர் – மகேஸ்வரா ரெட்டி மூலி
இயக்குநர் – பரத் தர்ஷன்
ஒளிப்பதிவு – C.H. குஷேந்தர்
இசையமைப்பாளர் – பரத் மஞ்சிராஜு
கலை இயக்குநர் – திருமலா M. திருப்பதி
எடிட்டர் – ஸ்ரீ வரபிரசாத்
உடை வடிவமைப்பாளர் – – அனு ரெட்டி அக்கட்டி
பாடலாசிரியர் – பூர்ணசாரி
மக்கள் தொடர்பு – யுவராஜ்
Thiru Veer, Aishwarya Rajesh, Bharat Dharshan, Maheswara Reddy Mooli, Gangaa Entertainments Production No 2 Launched Grandly
Shivam Bhaje , Masooda , Pre Wedding Show ,