ரோபோ சங்கர் நடிக்கும் ‘அம்பி’

T2 Media என்ற புதிய பட நிறுவனம் சார்பில் எஃப். பிரசாந்தி பிரான்சிஸ் தயாரித்திருக்கும் படத்திற்கு ‘அம்பி’ என்று பெயரிட்டுள்ளனர்.

மேடை கலைஞராக தனது கலை பயணத்தை துவக்கி தொடர்ந்து சின்னத்திரை, பிறகு வெள்ளித்திரையில் காமெடியனாக கலக்கிக் கொண்டிருக்கும் ரோபோ சங்கர் இந்த படத்தின் மூலம் கதையின் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

அவருக்கு ஜோடியாக அஸ்வினி சந்திரசேகர் நடித்துள்ளார்.

மற்றும் ரமேஷ் கண்ணா, கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி மோகன் வைத்யா, கோவை பாபு, நமோ நாராயணா, மீசை ராஜேந்திரன், சேரன்ராஜ், மிப்புசாமி, ராதாமா, ஷர்மிளா, ஆர்த்தி, வித்யா, ராணி பாட்டி என ஏராளமான நட்சத்திர பட்டாளங்களும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.

வெற்றிவேல் முருகன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கன்னடத்தில் அகோரா, நெகிழா தர்மா, மகளே, Tt #50 படங்கள் உட்பட ஏராளமான படங்களுக்கு இசையமைத்திருக்கும் ஏ பி முரளிதரன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

நா ராசா பாடல் வரிகளை பிரபல இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி மற்றும் பிரபல பாடகர்கள் சைந்தவி, சத்யபிரகாஷ், டிரம்ஸ் சிவமணி, தேவகோட்டை அபிராமி ஆகியோர் பாடி இருக்கிறார்கள்.

கலை இயக்குனராக அன்பு பணியாற்றியுள்ளார். வைலன்ட் வேலு ஸ்டண்ட் இயக்குனராகவும், கார்த்திக் நடன இயக்குனராகவும் பணியாற்றியுள்ளனர்.

 

roboshankar staring ambi
Comments (0)
Add Comment