திரைப்படமாக ராமாயணம் பாகம் ஒன்று மற்றும் இரண்டு

நித்தேஷ் திவாரி இயக்கத்தில், நமித் மல்ஹோத்ராவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட  திரைப்படம், “ராமாயணம்”, இந்திய சினிமா ரசிகர்களை ஆச்சரியர்த்தில் ஆழ்த்தவுள்ளது.

இந்தியாவின் மிகவும் நேசத்துக்குரிய கதையினை தொலைநோக்கு கதைசொல்லலுடன் திரையில் உயிர்ப்பிக்கவுள்ளது.

பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோவின் தொலைநோக்கு சக்தியாக, நமித் மல்ஹோத்ரா ஹாலிவுட்டின் சில பெரிய திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார், இதில் டுயூன், இன்செப்ஷன் மற்றும் தி கார்பீல்ட் மூவி போன்ற சமீபத்திய வெற்றித் திரைப்படங்களும் அடங்கும்.

கூடுதலாக, அவர் ஆங்க்ரி ஃபேர்ட்ஸ் 3ஐயும் சமீபத்தில் அறிவித்துள்ளார். நமித் மல்ஹோத்ராவின் கதைசொல்லல் பற்றிய ஆழமான புரிதல் அவரை ஹாலிவுட்டின் மிக முக்கியமான இந்தியர்களில் ஒருவராக ஆக்கியுள்ளது.

சமூக ஊடகங்களில், நமித் மல்ஹோத்ரா ஒரு போஸ்டரை பகிர்ந்து கொண்டு கூறியுள்ளதாவது.., “ஒரு தசாப்தத்திற்கும் முன்னதாக, 5000 ஆண்டுகளுக்கும் மேலாக பில்லியன் கணக்கான இதயங்களை ஆட்சி செய்த, இந்த காவியத்தை பெரிய திரைக்கு கொண்டு வருவதற்கான உன்னதமான தேடலை நான் தொடங்கினேன்.

எங்களது குழு ஒரே ஒரு அரிய நோக்கத்துடன் அயராது உழைக்கும்போது, அது அழகாக வடிவம் பெறுவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்: நமது வரலாறு, நமது உண்மை மற்றும் நமது கலாச்சாரத்தின் மிகவும் உண்மையான, புனிதமான மற்றும் பார்வைக்கு பிரமிக்க வைக்கும் தழுவல் – நமது “ராமாயணம்” – உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு விரைவில்.

 

Namit MalhotraRamayana
Comments (0)
Add Comment