ராஷ்மிகா படத்தின் டீசரை வெளியிட்ட விஜய் தேவரகொண்டா

பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் வழங்கும் இப்படத்தை, கீதா ஆர்ட்ஸ், மாஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் தீரஜ் மொகிலினேனி என்டர்டெயின்மெண்ட் பேனர்கள் இணைந்து தயாரிக்கிறது.

ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ள “தி கேர்ள்பிரண்ட்” படம் ஒரு அழகான காதல் கதையைச் சொல்கிறது. இப்படத்தை தீரஜ் மொகிலினேனி மற்றும் வித்யா கோப்பினிடி ஆகியோர் தயாரித்துள்ளனர்.

பிரபல முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா “தி கேர்ள்பிரண்ட்” படத்தின் டீசரை வெளியிட்டார்.

படம் குறித்து விஜய் தேவரகொண்டா…. “தி கேர்ள்பிரண்ட்” டீசரில் உள்ள ஒவ்வொரு காட்சியும் வெகு சுவாரஸ்யமாக உள்ளது.

இந்தப் படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். 8 ஆண்டுகளுக்கு முன்பு படப்பிடிப்பு தளத்தில் ராஷ்மிகாவை சந்தித்தேன். பல பெரிய வெற்றிகளைப் பெற்றாலும், இன்னும் அவர் மிகவும் அடக்கமாகவே இருக்கிறார்.

“தி கேர்ள்பிரண்ட்” படம், ஒரு நடிகையாக அவருக்கு அதிக பொறுப்பை அளித்துள்ளது, அந்த பொறுப்பை அவர் முறையாக ஏற்றுக்கொண்டு, தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

ரசிகர்களின் இதயங்களைக் கவரும் “தி கேர்ள்பிரண்ட்” படத்தின் ஒட்டுமொத்த குழுவிற்கும் எனது வாழ்த்துகள்,” என்று அவர் கூறியுள்ளார்.

“தி கேர்ள்பிரண்ட்” டீஸர் ராஷ்மிகா கல்லூரி விடுதிக்குள் நுழைவதிலிருந்து தொடங்குகிறது. டீசர் ஹீரோ தீக்ஷித் ஷெட்டி மற்றும் ராஷ்மிகாவின் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துகிறது, அவர்களுக்கு இடையேயான அழகான உறவைக் காட்டுகிறது.

கல்லூரியில் படிக்கும் காலத்தில் முன்னணி ஜோடியின் உணர்வுபூர்வமான பயணம் இதயப்பூர்வமான தருணங்களுடன் அவர்களின் உறவைச் சித்தரிக்கிறது.

கவித்துவமான உரையாடல்களுடன் விஜய் தேவரகொண்டாவின் குரல்வளம் நம்மை கவர்கிறது.

ஹேஷாம் அப்துல் வஹாப்பின் பின்னணி இசையும், டீசரின் முடிவில் ராஷ்மிகாவின் உரையாடலும் அனைவரையும் கவர்வதாக அமைந்துள்ளது.

வித்தியாசமான காதல் கதையாக உருவாகி வரும் “தி கேர்ள்பிரண்ட்” விரைவில் திரைக்கு வர உள்ளது.

Rashmika MandannaRashmika Movie teaser released by vijay devarakondaThe GirlfriendVijay Deverakondaதி கேர்ள்பிரண்ட்ராஷ்மிகாவிஜய் தேவரகொண்டா
Comments (0)
Add Comment