பிரஜின் – புகழ் இணைந்து நடிக்கும் காமெடி படம்

ARK PRODUCTIONS சார்பில் ராமகிருஷ்ணன் ஆறுமுகம் மற்றும் ECOPMIN MOTION PICTURES சார்பில் வினோத் பெருமாள் இருவரும் இணைந்து பிரமாண்டமாக தயாரிக்கும் படத்திற்கு ” ஊருக்கு ரெண்டு ஊதாரி ” என்று கலகலப்பான தலைப்பை வைத்துள்ளனர்.

பிரபல நடிகர்கள் பிரஜின், புகழ் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.

பிக் பாஸ் மூலம் மக்களிடையே பிரபலமாகி ‘லியோ’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜனனி இந்தப் படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார்.

இவர்களுடன் விக்ரம் விஜய் முக்கியம் கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். மற்றும் ரவிமரியா, மைம்கோபி, தீபா அக்கா, அபிதா ஆகியோர் நடிக்கிறார்கள்.

பிரபல இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இந்த படத்திற்கு இசையமைக்க, பியார் பிரேமா காதல், கழுகு 2, நான் மிருகமாய் மாற, நினைவெல்லாம் நீயடா  போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ராஜா பட்டாசார்ஜி  ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை செந்தமிழ் செல்வன் செய்ய, கலை இயக்கத்தை மணிகண்டன் கையாள்கிறார்.

orukku irandu oothariஊருக்கு ரெண்டு ஊதாரிபிரஜின்புகழ்ரஜினி முருகன்வருத்தப்படாத வாலிபர் சங்கம்
Comments (0)
Add Comment