இசையமைப்பாளர் வித்யாசகர் இசையமைத்த ஆன்மிக ஆல்பம்

ஶ்ரீ ஐயப்பன் அறம் சேவா லிமிடட் முரளிகிருஷ்ணன் சிங்கப்பூர் தயாரிப்பில், சரிகமா நிறுவனம் வழங்கும், இசையமைப்பாளர் வித்யா சாகர் இசையில், ‘அஷ்ட ஐயப்ப அவதாரம்’ ஆன்மிக ஆல்பம்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான வித்யாசகர், முதன்முறையாக ஆன்மிக பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

ஐயப்ப சாமியின் புகழ் பாடும் வகையில் உருவாகியுள்ள, ‘அஷ்ட ஐயப்ப அவதாரம்’ ஆல்பத்தை, இந்தியாவின் முன்னணி இசை நிறுவனமான சரிகமா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஶ்ரீ ஐயப்பன் அறம் சேவா லிமிடட் சார்பில், முரளிகிருஷ்ணன் சிங்கப்பூர் இந்த ஆல்பத்தை தயாரித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் 225 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து புகழ்பெற்றவர், இசையமைப்பாளர் வித்யாசாகர்.

முன்னணி நட்சத்திரங்களின் வெற்றிப்பாடல்கள் முதல், காலத்தால் அழியாத பல அற்புதமான மெலடி பாடல்களைத் தந்து, மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த வித்யாசாகர், முதன் முறையாக ஆன்மீக பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

சுயாதீன ஆல்பங்கள், திரைப்பட பாடல் இசை, ஆன்மீக ஆல்பம் என இந்திய இசைத்துறையில் கோலோச்சும் முன்னணி இசை நிறுவனமான சரிகமா நிறுவனம் இந்த ‘அஷ்ட ஐயப்ப அவதாரம்’ இசை ஆல்பத்தினை வெளியிட்டுள்ளது.

‘அஷ்ட ஐயப்ப அவதாரம்” ஆல்பத்தின் 10 பாடல்களுக்கும் வித்யாசாகர் இசையமைக்க, முன்னணி நட்சத்திர பாடகர்கள் சித்ரா, ஷங்கர் மகாதேவன், ஹரிசரண், விஜய் பிரகாஷ், புஷ்பவனம் குப்புசாமி முதலாக பல முன்னணி பாடகர்கள் பாடியுள்ளனர்.

இந்த பாடல்களின் ஆடியோ வடிவம் வெளியாகி, இசை தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. வீடியோ வடிவில் இது வரை 4 பாடல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் வெளியான “கருப்பு வராரு” வீடியோ பாடலில், தினேஷ் மாஸ்டர் நடனமைக்க, இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன் நடனமாடியுள்ளார்.

Ashta Ayappa AvatharamMusic Director Vidyasagarஅஷ்ட ஐயப்ப அவதாரம்இசையமைப்பாளர் வித்யாசகர்சித்ராபுஷ்பவனம் குப்புசாமிவிஜய் பிரகாஷ்ஷங்கர் மகாதேவன்ஹரிசரண்
Comments (0)
Add Comment