காஜல் அகர்வால் – ஷ்ரேயாஸ் தல்படே இணையும் ‘தி இந்தியா ஸ்டோரி’

நடிகை காஜல் அகர்வால் மற்றும் நடிகர் ஷ்ரேயாஸ் தல்படே முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படம் வரும் ஜூலை 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. Zee Studios வழங்கும் இந்தப் படத்தை MIG Production & Studios இணைந்து தயாரித்துள்ளது.

சமூக மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை சேட்டன் டி.கே இயக்கியுள்ளார். சாகர் பி. ஷிண்டே கதை எழுதி தயாரித்துள்ள இந்த திரைப்படம், பூச்சிக்கொல்லி விவசாயத்தில் இரசாயனங்களின் தவறான பயன்பாடு மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

‘தி இந்தியா ஸ்டோரி’ (The India Story) அல்லது ‘தி இந்தியா ஸ்டோரி: ஸ்லோ பாய்சன்’ (The India Story: Slow Poison) என அறியப்படும் இந்தப் படம், ஒரு குடும்பத்தின் கதையை மட்டுமல்லாமல், பொதுமக்களின் உடல்நலம், உணவுப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள பிரச்சினையை ஆழமாக ஆராய்கிறது. அதேவேளையில், இதுபோன்ற பாதிப்புகளைத் தடுக்க கடுமையான சட்டங்களும் கட்டுப்பாடுகளும் அவசியம் என்பதை வலியுறுத்துகிறது.

படம் குறித்து தயாரிப்பாளர் சாகர் பி. ஷிண்டே …,

“நாட்டின் பல பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியும் பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு உண்மையை இந்தக் கதை வெளிக்கொண்டு வருகிறது. பூச்சிக்கொல்லி விவசாயத்தில் இரசாயனங்களின் தவறான பயன்பாடு சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமல்ல; அது மனித வாழ்வையே நேரடியாக பாதிக்கும் ஒரு மிகப்பெரிய சவால். இந்தப் படத்தின் மூலம் விழிப்புணர்வையும் பொறுப்புணர்வையும் உருவாக்க விரும்புகிறோம்,” என்றார்.

இயக்குநர் சேட்டன் டி.கே …,

“கதையின் உண்மைத்தன்மையை திரையில் கொண்டு வர ஒவ்வொருவரும் முழுமையான அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். காஜல் அகர்வாலும் ஷ்ரேயாஸ் தல்படேயும் தங்களது கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளனர். அவர்களின் நுட்பமான நடிப்பு படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும்,” என்றார்.

பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள காஜல் அகர்வாலும், பல்வேறு கதாபாத்திரங்களின் மூலம் பாராட்டுகளைப் பெற்றுள்ள ஷ்ரேயாஸ் தல்படேயும் முதன்முறையாக இணைந்து நடிப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் கூட்டணி படத்தின் உணர்ச்சிப்பூர்வமான மற்றும் தீவிரமான காட்சிகளுக்கு கூடுதல் வலுசேர்க்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சமூக அக்கறை மற்றும் விழிப்புணர்வை மையமாகக் கொண்ட திரைப்படங்களுக்கு தற்போது பார்வையாளர்கள் அதிக வரவேற்பு அளித்து வரும் நிலையில், ‘தி இந்தியா ஸ்டோரி’ ஒரு முக்கியமான மற்றும் பொருத்தமான திரை வெளியீடாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூக பொறுப்புணர்வை தூண்டும் இந்த திரைப்படம், சினிமாவைத் தாண்டி பல்வேறு விவாதங்களையும் உருவாக்கும் என்பதில் படக்குழுவினர் உறுதியாக உள்ளனர்.

இப்படத்தில் இணை தயாரிப்பாளர்களாக ஸ்வாதி வினாயக் சைன்டானே, அனிதா ஜாதவ், விநாயக் சைதானி, கல்பேஷ் ஷா, தேவ்யானி கொராடே மற்றும் பிரேம் ஜோஷி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். நிஷாந்த் பக்வத் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு மங்கேஷ் தாக்டே இசையமைத்துள்ளார். ஆஷிஷ் மாத்ரே படத்தொகுப்பை கவனித்துள்ள நிலையில், ஷகீல் அஜாமி பாடல்களை எழுதியுள்ளார். ஒலி வடிவமைப்பை அன்மோல் பாவே மேற்கொண்டுள்ளார்.

சமூக விழிப்புணர்வை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படம், ஜூலை 24ஆம் தேதி Zee Studios மூலம் உலகம் முழுவதும் வெளியாகிறது.

Kajal AggarwalShreyas TalpadeThe India Storyஇயக்குநர் சேட்டன் டி.கேகாஜல் அகர்வால்தயாரிப்பாளர் சாகர் பி. ஷிண்டேதி இந்தியா ஸ்டோரிஷ்ரேயாஸ் தல்படே
Comments (0)
Add Comment