தலைமைச்செயலகத்தின் தல யார்?

தலைமைச்செயலாளர் இறையன்புவுக்கும், முதலமைச்சரின் முதன்மை செயலாளர் உதயசந்திரனுக்கும் இடையில் பனிப்போர் நிலவுவதாக கோட்டைவட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற உடன் தலைமைச்செயலாளராக நியமிக்கப்பட்டவர் இறையன்பு.

1988- ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியான இறையன்பு சமூக அக்கறை கொண்ட அதிகாரி.

நேர்மையானவர்.

மனுதாரர்கள் மனு கொடுத்துவிட்டு வீட்டுக்குச் செல்வதற்குள் அவர்களுடைய குறைகளைத் தீர்த்து வைக்குமளவுக்கு சுறுசுறுப்பான அதிகாரி.

முதலமைச்சர் ஸ்டாலினின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள உதயச்சந்திரனும் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரிதான்.

1995 பேட்ச் அதிகாரியான உதயச்சந்திரன் பள்ளிக் கல்வித்துறையில் சிறப்பாகச் செயல்பட்டு சமச்சீர் கல்விக்கு வித்திட்டவர்.

பிறகு தொல்லியல் துறைக்கு மாற்றப்பட்டு அங்கும் சிறப்பாகப் பணியாற்றி கவனம் ஈர்த்தார்.

இறையன்பு, உதயச்சந்திரன் ஆகிய இரண்டு நேர்மையான அதிகாரிகள் இணைந்து அரசு இயத்திரத்தை திறம்பட இயக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால்… நடப்பதோ வேறு.

என்ன நடக்கிறது தலைமைச்செயலகத்தில்?

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உதவி ஆட்சியராக பணியைத்தொடங்கியவர் இறையன்பு.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றிய இறையன்பு, கடலூர் மாவட்டத்தில் சுனாமி பேரிடரின்போது நிவாரணப்பணியில் ஈடுபட்டார்.

அவரால் பலனடைந்த மக்கள் தங்களுடைய பகுதிக்கு இறையன்பு நகர் என்று பெயர் சூட்டி இறையன்புவுக்கு நன்றி தெரிவித்தனர்.

100 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இறையன்பு, ஐ.ஏ.எஸ் ஆவது எப்படி என்ற புத்தகத்தை எழுதி தமிழ்நாட்டு மாணவர்களை, இளைஞர்களை இந்திய ஆட்சிப்பணி, அரசுப்பணிகளில் பங்கெடுக்க வழிகாட்டியவர்.

1995 ல் தஞ்சாவூரில் நடைபெற்ற எட்டாவது உலகத்தமிழ்நாட்டை நடத்த சிறப்பு அலுவலராக இறையன்புவை நியமித்தார் ஜெயலலிதா.

அதை வெற்றிகரமாக நடத்திக்காட்டினார் இறையன்பு.

2010 ஆம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான அரசு நடத்திய உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிலும் சிறப்பு அலுவலர் பொறுப்பு இறையன்புவுக்கு வழங்கப்பட்டது.

செம்மொழி மாநாட்டை சிறப்பாக நடத்தி காட்டியதோடு, திருவள்ளுவரும், ஷேக்ஸ்பியரும் என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்து முதலமைச்சர் கருணாநிதியின் பாராட்டையும், பரிசையும் பெற்றார்.

2006 ஆம் ஆண்டு நடைபெற்ற திமுக ஆட்சியில் , பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.

2009 ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றபோது, சிறப்பு திட்டங்கள் செயலாக்கம், உட்பட முக்கிய பொறுப்புகளில் துணை முதலமைச்சரின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார் இறையன்பு.

கடந்தகாலங்களில் தலைமைச்செயலாளர் பதவிக்கு நியமனம் நடக்கும் போதெல்லாம், தகுதியற்றவருக்கு வழங்கப்பட்டிருப்பதாக விமர்சிக்கப்படுவது வழக்கம்.

இறையன்பு தலைமைச்செயலாளராக நியமிக்கப்பட்டபோது சின்ன முணுமுணுப்பு கூட இல்லை.

அந்தளவுக்கு அந்தப்பதவியை அலங்கரிக்க மிகவும் தகுதியானவர் என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டார் இறையன்பு.

முதலமைச்சரின் முதன்மை செயலாளர் பதவியில் நியமிக்கப்பட்ட உதயச்சந்திரனும் சென்ற இடமெல்லாம் சிறப்புடன் பணியாற்றியவர்.

பல வருடங்களாக நடத்தப்படாமல் இருந்த பாப்பாபட்டி, கீரிப்பட்டி தேர்தலை வெற்றிகரமாக நடத்திக்காட்டியவர் உதயசந்திரன்.

அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி உதயசந்திரனை அழைத்து பாராட்டினார். அதுமுதல் அவருடன் நெருக்கம் ஏற்பட்டு கருணாநிதிக்கு செல்லப்பிள்ளையாக இருந்தகவர் உதயசந்திரன்.

அதனாலேயே அதிமுக ஆட்சியில் டம்மியாக்கப்பட்டார்.

பள்ளிக் கல்வித்துறை செயலாளராக இருந்தபோது பள்ளிக்கல்வித்துறைக்கு ஏராளமான பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தார்.

ரேங்கிங்கை வைத்து தனியார் பள்ளிகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதை தடுப்பதற்காக , பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் ரேங்கிங் முறையை ரத்து செய்தார்.

பாடத்திட்டங்களை சீரமைப்பு செய்தார்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு 1200 மதிப்பெண்கள் இருந்ததை 600 மதிப்பெண்களாக குறைத்தார்.

அடையாறு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை சீரமைத்தது, டிஜிட்டல் நூலகம் அமைக்கும் பணியை சிறப்பாக செய்து முடித்தார்.

பிறகு தமிழக தொல்லியல்துறை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றதும் முதல்வரின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார் உதயச்சந்திரன்.

இந்தப் பதவிக்கு முதலில் பரிசீலிக்கப்பட்டவர் தற்போது சென்னை மாநகராட்சி ஆணையராக இருக்கும் ககன்ஷிப் பேடி.

எனக்கு தமிழ் சரளமாகத் தெரியாது அதனால் அந்தப்பதவிக்கு நான் பொருத்தமாக இருக்க மாட்டேன் என்று ககன்ஷிங்பேடி நழுவியதால், அந்தப் பதவி உதயசந்திரனுக்கு வழங்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

முதல்வருக்கு ஆலோசனை வழங்குதல், முதல்வரின் திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுப்பது, துறை சார்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடுவது போன்றவைதான் முதல்வரின் செயலாளர்களுக்கான பணி.

தன்னுடைய அதிகார எல்லையை மீறி, தலைமைச்செயலாளர் இறையன்புவின் பணிகளில் தலையிடுகிறார் என்ற குற்றச்சாட்டுக்கு சமீபகாலமாக ஆளாகி இருக்கிறார் உதயசந்திரன்.

முதலமைச்சரின் செயலாளர் பதவியைவிட அதிகாரம்மிக்கது தலைமைச்செயலாளர் பதவிதான்.

அவருக்குத்தான் பவர் அதிகம்.

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யும் அதிகாரம் அவருக்கே உண்டு.

ஆனால், முதலமைச்சரின் முதன்மை செயலாளரான உதயசந்திரன், முதலமைச்சர் உடனான நெருக்கத்தை பயன்படுத்தி ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் உட்பட அனைத்து விஷயங்களையும் அவரே தீர்மானிக்கிறாராம்.

அனைத்து முக்கிய விஷயங்கள் குறித்தும் உதயசந்திரனே முடிவு எடுப்பதால் இறையன்பு டம்மியாக்கப்பட்டு வருவதாக கோட்டை வட்டாரத்தில் பேச்சு அடிபட ஆரம்பித்துள்ளது.

சுருக்கமாக சொன்னால், எல்லாவற்றையும் உதயசந்திரனே தீர்மானிப்பதால், வெறுமனே கையெழுத்திடும் பொம்மை மாதிரி இறையன்பு இருக்கிறாராம்.

முதலமைச்சர் கலந்து கொள்ளும் விழாவுக்கு இறையன்பு வருகிறாரே தவிர, கடந்த சில வாரங்களாக முதலமைச்சர் உடனான மீட்டிங்கில் கூட அவரை பார்க்க முடிவதில்லையாம்.

எல்லாவற்றையும் தன்னுடைய முதன்மை செயலாளரான உதயசந்திரன் உடன் ஆலோசனை செய்து விடுகிறாராம் முதலமைச்சர் ஸ்டாலின்.

தலைமைச்செயலாளரான தன்னை, தனக்குக் கீழ் உள்ள. அதுவும் தன்னைவிட ஜூனியரான ஒரு அதிகாரி டம்மியாக்கிவிட்டாரே என்ற வருத்தம் இறையன்புவுக்கு இருந்தாலும் அதை வெளியேகாட்டிக்கொள்ளாமல் மனதிற்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருக்கிறாராம்.

விரைவில் ரிடையார்ட் ஆக இருக்கும் இந்த நேரத்தில் எதற்கு வீண் பஞ்சாயத்து என்று இறையன்பு நினைக்கிறார்.

அதனாலேயே அவமானங்களை விழுங்கிக்கொண்டு அமைதிகாக்கிறார் என்கின்றனர் சக ஐஏஎஸ் அதிகாரிகள்.

 

காணொலி வடிவத்தில் காண…

https://youtu.be/oZ9FSFNSFvY

anbil poyyamozhiDMKdmk partyiraianbu iasiraianbu ias Vs udhayachandran ias - Who is the First?karunanidhim k stalinmahesh poyyamozhimk stalinudhayachandran iasudhayanidhi stalinதலைமைச்செயலகத்தின் தல யார்?
Comments (0)
Add Comment