‘கடைசி உலகப் போர் -ஸ்வாக் – லைக் எ டிராகன்: யாகுசா ஆகிய மூன்று படைப்புகளையும் பிரைம் வீடியோவில் ஆஃபருடன் காணத்தவறாதீர்கள்
இந்த வார இறுதியில் பிரைம் வீடியோவின் சமீபத்திய ஆஃபர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!. பரபரப்பான டிஸ்டோபியன் தமிழ் ஆக்சன் திரில்லர் திரைப்படமான ‘கடைசி உலகப் போர் ‘ – தெலுங்கு மொழியில் வெளியான நகைச்சுவை நாடகமான ‘ஸ்வாக்’ மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜப்பானிய மொழியில் வெளியான கிரைம் ஆக்சன் தொடரான ‘லைக் எ டிராகன்: யாகுசா’. இந்த மூன்று புதிய வெளியீடுகளை தவற விடாதீர்கள்!
கடைசி உலகப் போர் :
2028 ஆம் ஆண்டில் நடைபெறுவது போல் அமைக்கப்பட்ட ஒரு டிஸ்டோபியன் அறிவியல் புனைவு கதை மற்றும் தமிழ் அதிரடி திரில்லர் திரைப்படமாகும். கதை- அரசியல் மோதல், உள்நாட்டு அமைதியின்மை மற்றும் டிஸ்டோபியன் எதிர்காலத்தில் சுதந்திரத்திற்கான போராட்டம் ஆகியவற்றை கருப்பொருளாக ஆராய்கிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கத்தில் அனகா எல். கே., நாசர், நடராஜன் சுப்பிரமணியம், அழகம்பெருமாள் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த அதிரடியான ஆக்சன் திரில்லர் திரைப்படம் தற்போது இந்தியாவில் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
தெலுங்கு நகைச்சுவை நாடகமான ‘ஸ்வாக்’ – இந்த திரைப்படத்தில் மனமுடைந்த போலீஸ் அதிகாரியான எஸ்ஐ பவபூதி – தான் ஒரு செல்வந்தரின் வாரிசாக இருப்பதை கண்டுபிடித்து, குழப்பமான பரம்பரை போருக்கு செல்ல வேண்டும். நகைச்சுவை மற்றும் சூழ்ச்சிகளுக்கு இடையில் அவர் எதிர்பாராத வகையில் நட்பை உருவாக்கிக் கொண்டு, இழந்த உரிமையை மீட்பதற்கான வாய்ப்பு உள்ளதை கண்டறிகிறார். பார்வையாளர்களை வெகுவாக ஈர்க்கும் இந்த தெலுங்கு நகைச்சுவை நாடகம் தற்போது பிரைம் வீடியோவின் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
‘லைக் எ டிராகன்:
யாகுசா’ எனும் திரைப்படம் 1995 மற்றும் 2005 ஆம் ஆண்டு என இரண்டு காலகட்டங்களில் பின்னணியில் உருவானது. இது ஒரு அசல் கிரைம் சஸ்பென்ஸ் ஆக்சன் தொடராகும். பயமுறுத்தும் வகையிலும், ஒப்பற்ற நிலையிலும்.. யாகுசா போர் வீரரான கசுமா கிரியுவின் வாழ்க்கையையும், அவரது குழந்தை பருவ நண்பர்கள் மற்றும் அவர் எடுக்கும் முடிவுகளின் விளைவுகள் ஆகியவற்றையும் விவரிக்கிறது.
நீதி- கடமை- மனிதாபிமானத்தின் வலுவான உணர்வு – ஆகியவற்றை கொண்டிருக்கும் ஜப்பானிய ஒரிஜினல் தொடரான இந்தத் தொடர் தற்போது பிரைம் வீடியோவில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி டப்பிங்குடன் ஜப்பானிய மொழியில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
மும்பை /அக்டோபர் 24 : பிரைம் வீடியோ இந்த வாரம் பார்வையாளர்களுக்கு பலதரப்பட்ட கன்டென்டுகளை கொண்டு வருகிறது.
கடைசி உலக போர்:
‘தி லாஸ்ட் வேர்ல்டு வார் ‘ என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சீனா, ரஷ்யா மற்றும் இந்தியாவின் அண்டை நாடுகள் உட்பட 72 நாடுகளால் உருவாக்கப்பட்ட குடியரசு எனும் புதிய சர்வதேச அமைப்பை சுற்றி இப்படத்தின் கதை அமைந்திருக்கிறது. இது உலகில் மிகப்பெரிய அரசியல் எழுச்சிக்கும் வழி வகுக்கிறது. இந்தியாவில் தமிழ்நாட்டை சேர்ந்த அனாதையான தமிழரசன்- முதலமைச்சரின் மகள் கீர்த்தனாவை காதலிக்கிறார். கீர்த்தனா தனது அரசியல் பயணத்தில் செல்வதற்கு தமிழ் உதவுவதால்… குடியரசு மற்றும் உள்நாட்டு அரசியல் சதிகளால் அவர்கள் பல சவால்களை எதிர்கொள்கிறார்கள்.
இந்த பரிசோதனை ரீதியிலான திரைப்படம் ..ஆக்சன் -நாடகம் -காதல்- ஆகியவற்றை ஒருங்கிணைத்து, உள்ளூர் கண்ணோட்டத்தில் உலகளாவிய நெருக்கடியை பற்றி தனித்துவமான பார்வையை வழங்குகிறது. அனகா எல். கே., நாசர், நடராஜன் சுப்பிரமணியம், அழகம்பெருமாள் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில் தமிழரசன் எனும் முக்கிய வேடத்தில் நடித்து ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம் தற்போது பிரைம் வீடியோவில் இந்தியாவில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
தெலுங்கு நகைச்சுவை நாடகமான ஸ்வாக் :
எஸ் ஐ பவபூதி எனும் போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையை மையப்படுத்தி, இப்படம் உருவாகி இருக்கிறது. அவரது தனிப்பட்ட வாழ்க்கை… மனைவியை பிரிந்த பிறகு அவரது வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது. ஆறுதலுக்காகவும் மற்றும் ஒரு புதிய தொடக்கத்தை தேடி..
ஷ்வாகனிக் வம்சத்தின் வழித்தோன்றலான இவர் குடும்பத்தின் செல்வத்திற்கு உரிமை கோருவதற்காக அதாவது அவருக்கு உரிமை உண்டு என்பதை தெரிவிக்கும் வகையிலான கடிதத்தை பெறுகிறார். பவபூதி தனது சூழ்நிலையின் சிக்கல்களை வழிநடத்தும் மற்றும் விசித்திரமான நபர்கள் அடங்கிய குழுவை சந்திப்பதால்.. திரைப்படம் ஒரு பரபரப்பான நகைச்சுவை படைப்பா…