இளையராஜா அய்யரா? அய்யங்காரா?

இப்படி ஒரு கேள்வியை கேட்பதற்கு காரணம் இருக்கிறது.

ராஜா – ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்.

சினிமாவுக்கு வருவதற்கு முன் பாவலர் வரதராசன் சகோதரர்களின் பாட்டிசை ஒலித்தது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கட்சியான கம்யூனிஸ்ட்கட்சியின் மேடைகளில்தான்.

சினிமாவில் இமாலய வெற்றி கிடைத்த பிறகு தன்னுடைய அடையாளத்தை மிக கவனமுடன் மறைத்துக் கொண்டார் இளையராஜா.

அவர் இசையமைத்த படங்களில் பலமுறை பரையோசை ஒலித்தாலும், இளையராஜா தன்னை தலித் என்று அடையாளப்படுத்திப்படுத்திக் கொண்டதில்லை.

ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து திரைத்துறைக்கு வந்த கோபி நயினார், பா.ரஞ்சித், மாரிசெல்வராஜ் போன்றவர்கள் தங்களுடைய சாதியை மறைத்ததில்லை.

மாறாக தம் இனத்தின் வலியை, வாழ்வியலை தங்களுடைய படைப்புகளில் பதிவு செய்ததோடு, பொதுவெளியிலும் தங்களை ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதியாக தங்களை பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு இருக்கும் பக்குவம், கர்வம் கூட இளையராஜாவுக்கு இல்லை,

தன் பிறப்பை, அடையாளத்தை, இனத்தை மறைப்பதைவிட மோசமான செயல் வேறில்லை. அப்பா அம்மாவை மறைப்பதற்கு சமமான இழிவான செயல்.

துரதிஷ்டவசமாக இளையராஜா செய்தது இப்படியொரு செயலைத்தான்.

இளையராஜாவை யாரும் தலித் என்று ஒதுக்கவில்லை.

உலகம் முழுக்க உள்ள ஒட்டுமொத்த தமிழர்களும் அவரை உச்சிமுகர்ந்து கொண்டாடினர்.

உயர்சாதியினர் என்று சொல்லப்படுகிற கே.பாலசந்தர், கமல்ஹாசன், உள்ளிட்டவர்கள் கூட இளையராஜாவுக்காக வரிசையில் காத்திருந்ததும், வாலி போன்ற பாடலாசிரியர்கள் இளையராஜாவின் தயவில் வாழ்ந்ததெல்லாம் வரலாறு.

கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட சாதியில் பிறந்த இளையராஜாவை கோடம்பாக்கமே கடவுளாக வழிபட்டது.

அவரை இசைக்கடவுளாகவே வழிபட்டனர்.

தமிழகமே தலையில் வைத்து கொண்டாடிய ரஜினியே, இளையராஜாவை சாமி என்று அழைத்தார். ஆராதித்தார்.

இத்தனை மரியாதைகளும் கௌரவங்களும் அங்கீகாரங்களும் இளையராஜாவுக்கு கிடைத்தபோது, அவர் தன்னை ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவராக அடையாளப்படுத்திக் கொண்டிருந்தால் சாதி வெறியர்களுக்கு அது சவுக்கடியாக இருந்திருக்கும்.

அதுமட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கர்வத்தையும் மிகப்பெரிய கௌரவத்தையும் கொடுத்திருக்கும்.

ரகுமானுக்கு ஆஸ்கார் மேடை கிடைத்தபோது, தமிழில் பேசி தன்னை தமிழனாய் அடையாளப்படுத்திக்கொண்டார்.

ஆனால் இளையராஜா ஒருநாளும் தன்னை ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவராக காட்டிக்கொள்ளவே இல்லை.

அதுமட்டுமல்ல ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை.

இன்றைக்கு ஒருவேளை சோறுகூட உண்ண வழியில்லாத ஒடுக்கப்பட்ட மக்கள் எத்தனையோ பேர்.

அவர்களுக்கு ஒருவாய் சோறு போட்டிருப்பாரா இளையராஜா?

ஒடுக்கப்பட்ட சமூகத்தில் கல்வி மறுக்கப்பட்டநிலையில் இன்னமும் தினக்கூலியாய் வாழ்க்கையை நகர்த்துகிறவர்கள் எத்தனையோ பேர்.

பள்ளிக்கல்வி முடித்து கல்லுரியில் படிக்க வசதியில்லாமல் கூலி வேலைக்கு செல்கிறவர்கள் எத்தனையோ பேர்.

இளையராஜா நினைத்திருந்தால் இவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்திருக்கலாம். வழிகாட்டி இருக்கலாம்.

ஆனால், இளையராஜாவுக்கு இதற்கெல்லாம் நேரமில்லை. மனமும் இல்லை.

மாறாக, அவர் அறிமுகப்படுத்திய பாடகர்களில் கூட உயர்சாதியினரே அதிகம்.

நமக்குக் கிடைத்த சினிமாப்புகழைக் கொண்டு நம் சமூகத்துக்கு ஏதாவது செய்திட வேண்டும் என்று எண்ணுகிற பா.ரஞ்சித். கோபிநயினார், மாரி செல்வராஜ் போன்றவர்களுக்கு இருக்கும் உணர்வு கூட இளையராஜாவுக்கு இல்லாமல்போனதுதான் துயரம்.

மாறாக, பிராமணர்களின் அங்கீகாரத்தையும் ஆசியையும்தான் பெரிதும் விரும்பினார்.

கர்னாடக இசைப்பாடகர் செம்மங்குடி சீனிவாசய்யரின் சதாபிஷேகத்திற்கு அழைக்காமலே சென்று அவருக்கு கனகாபிஷேகம் செய்தார்.

இளையராஜாவின் வருகையை அங்கிருந்தவர்கள் முகச்சுழிப்போடு பார்த்தனர்.

2017ஆம் ஆண்டு டிசம்பர் இசை விழாவை இளையராஜா தொடங்கி வைத்தார். அப்போது பிராமணர்கள் மத்தியில் முனுமுனுப்புகள் எழுந்தன. இசைக்கு தொடர்பில்லாத நீதிபதிகளும் விஞ்ஞானிகளும் தொடங்கி வைத்ததுண்டு. இளையராஜா தொடங்கி வைக்கும் போது விமர்சனம்.

ஆனாலும் இளையராஜா இன்னமும் உயர்சாதி மனப்பான்மையிலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

இளையராஜா வீடு – லோயர்கேம்ப் கூடலூர்

– பங்களா. அம்மா, மனைவி சமாதி.

தீபாவளி டயத்தில் 1 வாரம் மொத்த ஃபேமிலி. ஆஃப்டர் லாக்டவுன்.

சமஸ்கிருதம் கற்றுத்தரும் குருகுலம்.

இன்றைக்கு பாஜக அரசு தமிழை அழித்துக்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் சமஸ்கிருதத்தை முன்னிலைப்படுத்திக்கொண்டிருக்கிறது.

சமஸ்கிருதத் தேசியமொழியாக்கினாலும் ஆச்சர்யமில்லை. இந்தநேரத்தில் தன் வீட்டை சமஸ்கிருத பள்ளியாக்கியுள்ளார் இளையராஜா.

 

Ilayaraja Iyerra? Ayyankara?இளையராஜா அய்யரா? அய்யங்காரா?
Comments (0)
Add Comment