தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
முன்னதாக கருணாநிதி நினைவிடத்தில் தேர்தல் அறிக்கையை வைத்து மரியாதை செய்தார்.
அறிவிப்பு நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், “தேர்தல் அறிக்கையில் 500 திட்டங்கள் இருக்கிறது. அதில் முக்கியமானவற்றை அறிவிக்கிறோம்” என்றார்.
திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
கொரோனா நிவாரணமாக ரேஷன் அட்டை தாரர்களுக்கு ரூ. 4000 வழங்கப்படும்.
அ.தி.மு.க அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குக்கு தனி நீதிமன்றம் அமைக்கப்படும்..
ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும்
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தப்படும்
பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.4 குறைக்கப்படும்
சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும்
கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வரும் வரை சொத்துவரி உயர்த்தப்படாது
சட்டப்பேரவை நிகழ்வு நேரலையாக டி.வி.யில் ஒளிபரப்பு
இந்து ஆலயங்களை சீரமைக்க ஆயிரம் கோடி ஒதுக்கீடு
தேவாலயங்களை சீரமைக்க ரூ.200 கோடி ஒதுக்கப்படும்
தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்
விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்
பத்திரிகையாளர்களுக்கு தனி ஆணையம் அமைக்கப்படும்
கலைஞர் உணவகம் அமைக்கப்படும்
மகளிர் பேறுகால உதவித்தொகை ரூ 24-ஆயிரமாக உயர்வு
மகளிர் பேறுகால விடுமுறை 12 மாதமாக உயர்த்தப்படும்
பள்ளியில் 8-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம்
கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை
மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் அமைக்கப்படும்
பள்ளிகளில் காலையில் மாணவர்களுக்கு பால் வழங்கப்படும்
உள்ளூர் டவுன் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம்
கூட்டுறவு நகை கடன் 5பவுன் வரை தள்ளுபடி, மகளிர் சுய உதவி குழுக்கள் கடன் தள்ளுபடி
பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாள்களுக்கு தீர்வு
வடலூரில் வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைக்கப்படும்
திமுகவின் தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற தனி அமைச்சகம்
நீட் தேர்வு ரத்து செய்யப்படும்
தனியார் நிறுவனங்களிலும் இட ஒதிக்கீடு
200 தடுப்பணைகள் அமைக்கப்படும்
நகரங்களில் ஆட்சேபம் இல்லாத இடங்களில் வீட்டு பட்டா
நடைபாதை வாசிகளுக்கு இரவு நேர காப்பாங்கள் திறக்கப்படும்
சிறுகுறு விசாயிகளின் மின்மோட்டார் வாங்க 10,000 மானியம்
கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்
சைபர் காவல்நிலையங்கள் செயல்படுத்தப்படும்
மீனவர்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவர்
பொங்கல் விழா மாபெரும் பண்பாட்டு விழாவாக கொண்டாடப்படும்
பெண்கள் இட ஒதுக்கீடு 40% ஆக அதிகரிக்கப்படும்
ரேஷன் கடைகளில் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும்
உளுந்தம்பருப்பு மீண்டும் வழங்கப்படும்
மலைக்கோயில்கள் அனைத்திலும் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும்
இந்து ஆலயங்கள், தேவாலயங்கள், பள்ளி வாசல்கள் சீரமைக்கப்படும்
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் படி பணி நியமனம்
சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் அரசு ஊழயர்களாக நியமனம் செய்யப்படுவர்
அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு டேப்லட் வழங்கப்படும்
நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 என உயர்த்தி வழங்கப்படும்
புதிய நீர் வள அமைச்சகம் உருவாக்கப்படும்
நீட் தேர்வை ரத்து செய்ய முதல் பேரவை கூட்டத்தொடரில் சட்டம் இயற்றப்படும்
பகுதி நேர ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள்
அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மக்கள் குறை தீர்ப்பு முகாம்
மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு திட்டம்