ஆரோமலே – ரொமான்டிக் காமெடி படம்

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரொமான்டிக் காமெடி படம் ‘ஆரோமலே’ மிக விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்திலிருந்து இன்ட்ரோ ஃபீல் க்ளிம்ப்ஸ் தற்போது வெளியாகி உள்ளது. இது காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுகளால் நிரம்பிய உலகத்துக்குள் ரசிகர்களை அழைத்துச் செல்கிறது.
முழுக்க முழுக்க நகைச்சுவை மற்றும் இதயம் தொடும் ரொமான்ஸை இணைத்து உருவாக்கப்பட்ட ‘ஆரோமலே’, தமிழ் சினிமாவில் பெரும் இடைவெளிக்குப் பிறகு ரொமான்டிக் காமெடி வகை படமாக வெளியாக உள்ளது.
பழம்பெரும் நடிகர் தியாகுவின் மகனான சரங் தியாகு இந்த படத்தை இயக்கியுள்ளார். மினி ஸ்டுடியோ எனும் தனது தனியார் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் எஸ். வினோத் குமார் தயாரித்துள்ளார்.  சித்து குமார் இசை ரசிகர்களை கவர்ந்து பாடல்கள் ஹிட் அடிக்கும் நிலையில், பின்னணி இசையும் படத்தின் உணர்ச்சியை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.
கிஷன் தாஸ் – ஹர்ஷத் கான் கூட்டணி ரசிகர்களை நிச்சயம் ரசிக்க வைக்க உள்ளது. காதல் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளில் சிவாத்மிகா ராஜசேகர் ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்வார். வி.டி.வி. கணேஷ் தனது வழக்கமான நகைச்சுவையுடன் சேர்த்து புதிய உணர்ச்சி பரிமாணத்தை வெளிப்படுத்தியுள்ளார். மூத்த நடிகை துலசி, கிஷனின் தாயாக முக்கியமான பாத்திரத்தை ஏற்று, படத்தின் உணர்ச்சி மையத்தை சிறப்பாக கொண்டு செல்கிறார்.
புதுமையான கதை சொல்லும் பாணி, ஈர்க்கும் திரைக்கதை, கண்ணுக்குப் பிடித்த காட்சியமைப்புடன் ‘ஆரோமலே’ இளைஞர்களும் குடும்ப பார்வையாளர்களும் ஒருசேர ரசிக்கும் படைப்பாக உருவாகி வருகிறது.
நடிகர்கள் பட்டியல்:
கிஷன் தாஸ், ஹர்ஷத் கான், சிவாத்மிகா ராஜசேகர், மேகா ஆகாஷ், வி.டி.வி. கணேஷ், துலசி, சிபி ஜெயகுமார், நம்ரிதா எம்.வி, சந்தியா வின்ஃப்ரெட் மற்றும் பலர்.
தொழில்நுட்பக் குழு:
– தயாரிப்பு நிறுவனம்: மினி ஸ்டுடியோ
– தயாரிப்பு: எஸ். வினோத் குமார்
– கிரியேட்டிவ் புரொடசர்: அதிதி ரவீந்திரநாத்
– இயக்கம்: சரங் தியாகு
– எடிட்டிங் மற்றும் ஸ்கிரிப்ட்
– சூப்பர்வைசர்: பிரவீன் ஆன்டனி
– இசை: சித்து குமார்
AaromaleyAaromaley – Romantic Comedy FilmAromale – Romantic Comedy Film
Comments (0)
Add Comment