அமிதாப்பச்சன் நடிக்கும் முதல் தமிழ்ப்படம்

44

1985ல் ஒய்ஜி மகேந்திரனுக்கு ஜோடியாக வெள்ளை மனசு என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரம்யா கிருஷ்ணன்.

34 வருடங்களாக பல்வேறு படங்களில் மாறுபட்ட கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன் பாகுபலி படத்தில் பெரிய அளவில் பேசப்பட்டார். ராஜமாதா என்ற அவருடைய கேரக்டருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தியாகராஜன் குமாரராஜாவின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திலும் மாறுபட்ட ஒரு கேரக்டரில் நடித்திருந்தார்.

அதாவது பிட்டு படத்தில் நடித்த பெண்மனியாக நடித்திருந்தார்.

இந்நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு ரம்யா கிருஷ்னணுக்கு கிடைத்துள்ளது.

தமிழ்வாணன் இயக்கத்தில் எஸ்.எஜே.சூர்யாவும், அமிதாப்பச்சனும் இணைந்து நடிக்கும் படம் ‘உயர்ந்த மனிதன்’.

தமிழ், ஹிந்தி மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் அமிதாப்பச்சனுக்கு ஜோடியாக நடிக்க ரம்யா கிருஷ்ணன் தேர்வாகியுள்ளார்.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. அமிதாப்பச்சன் நடிக்கும் முதல் தமிழ்ப்படம் (?) ‘உயர்ந்த மனிதன்’ படம்தான்.

தலைப்புக்கு ஏற்ற படத்தில்தான் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் அமிதாப்!