ஹீரோக்களுடன் டூயட் பாடி போரடித்துவிட்டது – அமலாபால்

97

நடிகைகளின் திரையுலக வாழ்க்கையில் திருமணத்துக்கு முன், திருமணத்துக்குப் பின் என இரண்டு அத்தியாங்கள். இவற்றில் பெரும்பாலான நடிகைகளின் வாழ்க்கையில் இரண்டாவது அத்தியாயம் அத்தனை சுபிட்சமாக இருப்பதில்லை. வெகுசிலருக்கே திருமணத்துக்குப் பிறகான திரையுலக வாழ்க்கையும் பிரகாசமாக இருந்திருக்கிறது.

இந்தப் பிரிவில் அமலாபாலும் அடக்கம். திருமணம், விவாகரத்துக்குப் பிறகும் பிஸி நடிகைகளின் பட்டியலில் அமலா பால் பெயரும் இருப்பது ஆச்சர்யம். இதற்குப் பின்னால் இருப்பது அதிர்ஷ்டம் மட்டும் அல்ல.

வேறென்ன?

அமலா பால் சொல்லக் கேட்போம்…

எல்லாருக்கும் ஒரு பயணம் இருக்கு. எனக்கும் ஒரு பயணம் இருக்கு. வாழ்க்கையில் சில விஷயங்கள் நாம நினைச்சமாதிரி அமையாதபோது நம்ம லைஃப் திடீர்னு உடைஞ்சு விழறமாதிரி இருக்கும். அதிலிருந்து எழுந்திருச்சு எந்த வழி போகணும்ங்கிறது நாம் எடுக்க வேண்டிய முடிவுதானே? எனக்கு யோகா, ஸ்பிரிட்சுவாலிட்டின்னு ஒரு பாதை அமைந்தது. அதை எனக்குக் கிடைத்த ஆசீர்வாதமாகப் பார்க்கிறேன்.

சொந்தப்படம் எடுக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டீர்களா? அல்லது விரும்பி தயாரிப்பாளராக மாறினீர்களா?

அப்படியெல்லாம் கிடையாது. நானாக விரும்பித்தான் இந்த ப்ராஜக்ட்டுக்குள் வந்தேன். நாங்க பண்ணிக்கிட்டிருக்கிற ‘கடாவர்’ஒரு ஃபாரன்சிக் த்ரில்லர் படம். இந்தியசினிமாக்களில் ஃபாரன்சிக் ஐந்து நிமிடங்கள் வந்தாலே அதிகம். ஆனால் ஹாலிவுட்டில் டிவி சீரிஸ் வெப் சீரிஸ் எல்லாம் நிறைய இருக்கு. இந்திய சினிமாவிலேயே முதல்முறையா ஃபாரன்சிக்கை பேஸ் பண்ணி இந்தப்படத்தை பண்ணிக் கிட்டிருக்கோம்.

மூன்று வருஷத்துக்கு முன்னாடி இந்தக்கதையை பல ஹீரோயின்களிடம் சொல்லிருக்காங்க. அப்ப ஹீரோயின் சப்ஜெட் பண்றதுக்கு பெருசா யாருக்கும் இன்ட்ரெஸ்ட் இல்ல. எனக்கும் இந்தக்கதையை சொல்லியிருந்தாங்க. அப்போது நானும் பிஸியா நிறைய படங்கள் பண்ணிட்டிருந்த நேரம். அதனால் அப்போது என்னால் பண்ண முடியலை. ஆனா, முதல்ல இருந்தே நான்தான் பண்ணணும்னு அவங்க ஆசைப்பட்டாங்க. எனக்கும் ரொம்ப பிடிச்ச படம்.”

ரொம்ப ஒல்லியாகிவிட்டீர்களே?

பொதுவாகவே நான் யோகா பண்ணுவேன். நான்வெஜ் சாப்பிடுவதில்லை. சுகர் இல்லை. ஹெல்த்தி லைஃப் ஸ்டைல். முக்கியமாக, பாண்டிச்சேரி ஆரோவில் பக்கத்துல குடிபோய்விட்டேன். என்னோட யோகா குருஜி அங்கதான் இருக்காங்க. நான் தங்கற கமியூனிட்டி ரொம்ப நல்ல கம்யூனிட்டி. எப்பவாச்சும் பிரேக்ஃபாஸ்ட்டுக்கு மீட் பண்ணுவோம். எல்லா வீக்என்ட்டும் மீட் பண்ணுவோம். அங்கே உள்ளவங்க கிரியேட்டிவ் கிரௌவுடு. 90 பர்சன்ட் வெஜிடேரியன் ஃபுட்தான்.

நீங்கள் செட்டிலாவதற்கு பாண்டிச்சேரியை தேர்வு செய்ததற்கு என்ன காரணம்?

இதுக்கு முன்னாடி டெல்லியில் குடியிருந்தேன். அங்கேருந்து ஹிமாலயா அடிக்கடி போவேன். ஹிமாலயா எனக்கு ரொம்ப பிடிக்கும். ஹிமாலயாவுக்கு வீட்டை ஷிப்ட் பண்ணிடலாமா என்றுகூட ஒருகட்டத்தில் எனக்கு ஐடியா இருந்தது. ஆனால் அங்கே போனால் என்னோட வொர்க் நிச்சயம் பாதிக்கப்படும். அதேசமயம் சென்னையிலும் என்னால தங்க முடியாது. ஏன்னா வொர்க் பண்ற இடத்துல என்னால தங்க முடியாது. சென்னை என்னுடைய வொர்க் பிளேஸ். ஷூட் முடிச்சுட்டு நான் வேற இடத்துக்குப் போகணும். அப்பதான் என்னால ரீ-சார்ஜ், ரீ-ஸ்டோர் பண்ண முடியும். வொர்க்கை முடிச்சுட்டு ஒரு பிரேக் எடுத்தால்தான் என்னால் மறுபடியும் வொர்க் பண்ண முடியும்.

சென்னை மட்டும் இல்ல எந்த சிட்டியிலும் பிரேக் எடுத்துக்கிற கான்செப்ட்டே இல்ல. டே நைட் வொர்க் பண்ணிக்கிட்டிருப்பாங்க… மார்னிங்கும் வொர்க் பண்ணிட்டிருப்பாங்க… த்ரூ அவுட்டா வொர்க், வொர்க், வொர்க் பண்ணிட்டிருப்பாங்க. இன்செக்யூரிட்டி, எனர்ஜி, காம்படீஷன், ரொம்ப ஜாஸ்தி. சிட்டில ஹோட்டல்ல தங்கினால்கூட அடுத்து என்ன பண்ணலாம்… அடுத்து என்ன பண்ணலாம் என்ற ஒரே யோசனையா இருக்கும். வாழ்க்கை அப்படியே வேஸ்ட்டாகிட்டே இருக்கும். எனக்கு அது பிடிக்காது.

சினிமாவே உண்மையைப்போல் நம்ப வைக்கப்படுகிற பொய்தானே… கொலை, தற்கொலை, முதலிரவு என சினிமாகாட்சிகள் எதுவும் உண்மையில்லை. நிர்வாணமாக இருப்பதுபோல் பார்வையாளனை உணர வைத்தால்போதாதா? ஆடை படத்தில் நிர்வாணக்காட்சி அவசியமா?

ஒரு ஆள்கூட ப்ரெண்ட்ஷிப் இருக்குன்னு வெச்சுக்கோங்க… நான் ஏன் பெஸ்ட் ஃபிரெண்டா இருக்கேன்… ஏன் எனக்கு உன்னை பிடிக்கும்னு சொல்ல ஆரம்பிச்சோம்னா… அதோட பியூட்டி போயிடும். அந்தமாதிரி சில விஷயங்களை நாம விவரிக்க முடியாது. அது எப்படி பண்ணினோம்னு எங்களுக்கே தெரியாது. அந்த ஸ்கிரிப்ட்டை சூஸ் பண்ணிய பிறகு அந்தக்காட்சியை எப்படி பண்ணலாம்னு நிறைய யோசிச்சோம் எங்களையும் தாண்டி அங்க ஒரு மேஜிக் நடந்தது.

பட ரிலீஸின்போது சம்பளபாக்கியை விட்டுக்கொடுப்பதும், வாங்கிய சம்பளத்தைவிட கூடுதலாக தயாரிப்பாளருக்கு பணம் கொடுப்பதும் இங்கே நடக்கிறது. இந்த அனுபவம் உங்களுக்கும் ஏற்பட்டதாமே?

சினிமா பிசினஸ் பத்தி நான் நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டிருக்கேன். ஒரு படம் நஷ்டம்னா அந்த புரொடியூஸரை கார்னர் பண்ணி எந்த புரோயஜனமும் இல்லைங்கிறது இப்ப எனக்கு புரியுது. நான் நடிச்ச பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் ரிலீஸ் ஆகாதுன்னு கேள்விப்பட்ட உடனே புரொடியூஸருக்கு கால் பண்ணினேன். அவர் கிட்டத்தட்ட அழுகிற நிலைமையில இருந்தார். படம் ரிலீஸ் ஆகலைன்னா நான் தற்கொலைதான் பண்ணணும் வேற வழி இல்லைன்னு சொன்னார். சுமார் முப்பது லட்சம் ஸார்ட்டேஜ் இருந்தது. என்னால முடிஞ்ச அளவுக்கு ஹெல்ப் பண்ணினேன். படம் ரிலீஸ் ஆகிடுச்சு. நான் கொடுத்த அந்த பணமும் வரலை. சம்பளமும் வரலை. நிறைய கமிட்மெண்ட்ஸ், பழைய கடன்கள் எல்லாம் இருந்ததால தயாரிப்பாளருக்கு நிறைய லாஸ் ஆயிடுச்சுன்னு எனக்கு புரிஞ்சுது. இப்ப அவரை கார்னர் பண்ணி என்ன பிரயோஜனம்?

ஆடை படத்தின் டீசர் வெளியீட்டுக்குப் பிறகு அது ஒரு ஆபாசப் படம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளதே…

அப்படி கிடையாது… டீசர் ரிலீஸ் பண்ணுறதுக்கு முன்னாடி எப்படி ஒத்துக்க போறாங்கன்னு ஒரு டென்ஷன் இருந்தது. டீசர் வெளியானதும் கமெண்ட்ஸ் எல்லாம் ரொம்ப பாஸிடிவ்வா இருந்தது. நியூஏஜ் ஆடியன்ஸ்ஸை நம்பித்தான் நாங்க இந்த படம் பண்ணியிருக்கோம். அவங்ககிட்டேருந்து நாங்க எதிர்பார்த்தைவிட டபுள் பாஸிடிவ்வான ரிசல்ட் கிடைச்சது. நெகட்டிவ் ரெஸ்பான்ஸ் தேடிப்பார்த்தா அது நிறைய கிடைக்கும். நான் அதைப் பார்க்கலை. எவ்வளவு நல்ல படம் பண்ணாலும் குறை சொல்லத்தான் செய்வார்கள். என்னைப்பொறுத்தவரைக்கும் எதிர்பார்த்ததைவிட நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சுருக்கு.

பாண்டிச்சேரியில் யோகா கிளாஸ், ஹோட்டல், ஏர்போர்ட்னு பல இடங்களில் நிறைய பேர் டீசர் பத்தி பேசினாங்க… மைனா படம் பண்ணும்போதுதான் எனக்கு இப்படி எல்லாம் ஃபீட்பேக் இருந்தது. அதற்கப்புறம் அந்த அளவுக்கு ரீச் ஆனது ஆடை டீசர்தான்.

ஆடை படம் ரிலீஸ் பிறகு அமலாபால் இமேஜ் ஏறுமா…?

என்னோட மாரத்தானை நான் முடிச்சுட்டேன். என்னைப் பொறுத்தவரைக்கும் அந்த மாரத்தான் ஓடி ஃபினிஸிங்பாயிண்ட் வரை ஓட முடியுமா என்றுதான் இருந்தது. இதுக்கப்புறம் நான் யோசிக்கலை. நான் அடுத்த படத்துக்கு நகர்ந்துட்டேன். சிலருக்கு என்மேல நம்பிக்கை ஜாஸ்தி ஆகலாம்… சில பேர் என்னை மதிக்கலாம்… சில பேர் என்னை வெறுக்கலாம்… எல்லாரையும் ப்ளீஸ் பண்ணி ஒரு ஆர்ட்டிஸ்ட்டா வாழ முடியாது. என்னை பொறுத்தவரைக்கும் ஐ இம்ப்ரஸ் இன் மை ஹார்ட். தட் இஸ் இம்பார்ட்டென்ட். என்னால அதைத்தான் ஃபோகஸ் பண்ண முடியும். அதனால மற்ற எதைப் பத்தியும் யோசிக்கலை…

இப்படியொரு நிர்வாணக்காட்சியில் நடித்ததால் பாலிவுட் படவாய்ப்பு தேடி வரும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறதா?

நான் நாளைப்பத்தி யோசிக்கலை. இந்த நிமிஷத்தைத்தான் யோசிக்கறேன். பாலிவுட்டை பத்தி எல்லாம் யோசிக்கலை. எந்த டைரக்டராச்சும் இந்த படத்தைப் பார்த்துட்டு அவங்க படத்துக்கு நான் ஒத்து வருவேன்னு நினைச்சு அணுகினால்… ஹிந்திப்படங்களில் நான் நடிப்பேன்.

அம்மா கணக்கு, ஆடை, அதோ அந்தப்பறவைபோல் என தொடர்ந்து ஹீரோயின் ஓரியண்டட் படங்களில் நடிப்பது ஏன்? ஹீரோவை லவ் பண்ணி, டூயட் பாடுகிற கதைகள் போரடித்துவிட்டது என்று எடுத்துக்கொள்ளலாமா?

அதுவும் ஒரு காரணம்தான். அதைவிட முக்கியமான காரணம் இருக்கிறது. இரண்டு வருஷம் இண்டஸ்ட்ரியை விட்டு வெளியேபோனதுக்கப்புறம் எனக்கு ஒருவித இன்செக்யூரிட்டி ஃபீலிங் இருந்தது. எல்லாரும் என்னை மறந்துட்டாங்க, நிறைய படம் பண்ணினால்தான் திரும்பவும் நாம் லைம்லைட்டுக்கு வர முடியும்னு நினைச்சு நிறைய படம் சைன் பண்ணேன். உண்மையா அந்த படங்களின் கதை பிடிச்சு சைன் பண்ணது கிடையாது. நான் இண்டஸ்ட்ரியில் இருக்கணும்ங்கிறதுக்காக சைன் பண்ணினேன். ஆனா அதனால எனக்கு எந்த ரிசல்ட்டும் வரலை.

நான் இன்டஸ்ட்ரியில இன்னும் இருக்கேன்னா… அஸ் எ ஆக்டர் நான் பண்ற வொர்க் என்னை இன்ஸ்ஃபையர் பண்ணனும். அஸ் எ ஹியூமன்பீயிங்காகவும், ஆக்டராகவும் என்னை அடுத்த இடத்துக்கு கூட்டிட்டு போகணும். அதற்கப்புறம் அந்த மாதிரியான படங்களை அவாய்டு பண்ண ஆரம்பிச்சேன். என்கிட்ட என்ன டேலன்ட் இருக்கோ, எனக்கு என்ன பண்ண முடியுமோ அதைத்தான் நான் பண்ணணும்ளு நினைச்சு சின்னதாக பிரேக் எடுத்துக்கிட்டேன். அதற்கப்புறம் நிறைய ஸ்கிரிப்ட் படிக்க ஆரம்பிச்சேன். ஹானஸ்ட்டா சொல்லணும்னா… ஒண்ணுமே பிடிக்கலை. பொய்யான ஸ்க்ரிப்ட்தான் நிறைய வந்துச்சு. ஃபீமேல்சென்ட்ரிக் கூட விமன் என்பவர்மெண்ட் என்கிற மாதிரி, ரொம்ப பொய்யான ஸ்க்ரிப்ட்தான் வந்தது. அதனால வெறுத்துப்போய் பேசாமல் சினிமாவை விட்டு போயிடுறேன்னு என் மேனேஜர்கிட்ட சொன்னேன்.

ஐ திங் ஐ வான்ட் டு பி குயிட். வேற ஏதாவது வேலை பார்க்கிறேன். இது எனக்கு செட்டாக மாட்டேங்குது. நான் நினைக்கற மாதிரி ஸ்டோரிஸ் சொல்லமாட்டோங்கறாங்க. பொய்யாதான் சொல்றாங்க… மே பி அதை என்னால மாத்த முடியாது என்று சொன்ன நேரத்தில்தான் ஆடை கதை வந்தது. முதலில் எனக்கு ஒரு சினாப்ஸிஸ்தான் வந்தது. படிச்ச உடனே எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இப்படியெல்லாம் யோசிக்கிறாங்களா வாவ் யாரது? ஐ வான்ட் டு மீட். உடனே டைரக்டர் ரத்னகுமாரை டெல்லிக்கு வரச்சொன்னேன். கதையைக் கேட்டதும் எனக்கு ஒரு எனர்ஜி வந்தது… வித்தியாசமான உண்மையான ஒரு கதை என்னை அட்ராக்ட் பண்ணிடுச்சு. மக்களுக்கும் நிச்சயம் பிடிக்கும் பாருங்க.”

-ஜெ.பிஸ்மி