அஜித் படத்துக்கு சிக்கலா…?

65

விஜய், சூர்யா போன்ற ஹீரோக்கள் நடித்த படங்கள் தமிழ்நாட்டில் வெளியாகும் அதேநாளில் ஆந்திராவிலும் வெளியாவது வாடிக்கை. ஆனால் அஜித் நடிக்கும் படங்கள் தமிழில் வெளியான சில வாரங்கள் கழித்தே ஆந்திராவில் வெளியாகின்றன. கடைசியாய் அஜித் நடித்த விஸ்வாசம் படம் கூட தமிழில் வெளியாகி சில வாரங்கள் கழித்தே தெலுங்கில் வெளியானது. காரணம் விஜய், சூர்யா போன்ற ஹீரோக்களுக்கு ஆந்திராவில் இருக்கும் மார்க்கெட் அஜித்துக்கு இல்லாததுதான்.

அஜித் தற்போது நடித்துவரும் நேர்கொண்ட பார்வை படம் ஆகஸ்ட் 10 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில் அதே தேதியில் நேர்கொண்ட பார்வை படம் தெலுங்கில் வெளியாக வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது.

‘பாகுபலி’ படத்தின் மிகப் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் நடித்து வரும் படம் ‘சாஹோ’.

சுஜீத் இயக்கி வரும் இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார்.

இவர்களுடன் அருண் விஜய், ஜாக்கி ஷெராஃப், நீல் நித்தின் முகேஷ், மந்திரா பேடி, ஈவிலின் ஷர்மா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்க, ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் மிகப் பிரம்மாண்டமானமுறையில் உருவாகி வரும் இப்படம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியாகிறது.

ஆந்திராவில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில் சாஹோ படம் வெளியாகும்நிலையில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்பே இல்லை. எனவே நேர்கொண்ட பார்வை படம் தமிழில் வெளியாகும் அதேநாளில் தெலுங்கில் வெளியாக வாய்ப்பில்லை.