துரோகியை அழைத்து வருகிறாரே – அஜித் பற்றி தயாரிப்பாளர் புலம்பல்

2859

கௌதம் மேனன் இயக்கத்தில், சூர்யா நடிப்பதாக இருந்த ‘துருவ நட்சத்திரம்’ படம் கைவிடப்பட்டநிலையில், அந்தப்படத்தில், அதாவது கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்க அஜித் சம்மதம் தெரிவித்தது யாருமே..ஏன் சூர்யாவே எதிர்பார்க்காத திருப்பம்.

அடுத்து நடந்ததோ அதைவிட திடீர் திருப்பம்.

கௌதம் மேனன் இயக்கத்தில் தான் நடிக்க ஒப்புக் கொண்ட படத்தைத் தயாரிக்கும் அதிர்ஷ்டத்தை அஜித் தற்போது நடித்துள்ள ‘ஆரம்பம்’ படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்துக்கே கொடுத்திருக்கிறார்.

அஜித்தின் கால்ஷீட் கிடைத்தால் மினிமம் பத்து கோடி கல்லா கட்டலாம் என்பதுதான் உண்மை. அப்பேற்பட்ட அட்சயபாத்திரத்தை ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பதுபோல் அல்லது கண்ணா ஒரே நேரத்தில் இரண்டு லட்டு தின்ன ஆசையா என்பதுபோல் ஏ.எம்.ரத்னத்துக்கு அடுத்தடுத்து இரண்டு படங்களுக்குக் கால்ஷீட் கொடுத்து அசத்தியிருக்கிறார் அஜித்.

இப்படி ஒரு வாய்ப்பு வேறு ஒரு தயாரிப்பாளருக்குக் கிடைத்திருந்தால் அஜித்துக்கு கோவிலே கட்டியிருப்பார்கள். ஆனால் ஏ.எம்.ரத்னமோ வருத்தத்தில் இருக்கிறாராம்.

காரணம்?

வாங்க ப்ளாஷ்பேக் போகலாம்…..

சில வருடங்களுக்கு முன், பல கோடி கடன்சுமையில் தவித்தபோது கஷ்டப்பட்டு விஜய்யிடம் கால்ஷீட் வாங்கினார். கௌதம் மேனனை இயக்குநராக ஒப்பந்தம் செய்து விஜய்யிடம் கதை சொல்ல அனுப்பினார். விஜய்யை சந்தித்த கௌதம் மேனன், அந்தப்படத்தை நானே தயாரிக்கிறேன் என்று சொல்லி ஏ.எம்.ரத்னத்தை வெற்றிகரமாக கழற்றிவிட்டார். பிறகு அந்தப்படம் ட்ராப்பானது தனிக்கதை.

அப்பேற்பட்ட நம்பிக்கை துரோகியை வைத்து நாம் படம் எடுப்பதா என்பதே ஏ.எம்.ரத்னத்தின் வருத்தம்.