ரஜினியுடன் மோதும் பவர்ஸ்டார்…! Comments Off on ரஜினியுடன் மோதும் பவர்ஸ்டார்…!

ரஜினி நடிக்கும் கபாலி படத்தை ஜூலை 1ஆம் தேதி அன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.

கபாலி வெளியாகும் அதே தினத்தில் அதாவது  ஜூலை-1ஆம் தேதி அட்ரா மச்சான் விசிலு படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் சினிமா ஹீரோவாக பவர்ஸ்டார் நடிக்கிறார்.   ரஜினியை கிண்டல் செய்யும் காட்சிகளுடன் அட்ரா மச்சான் விசிலு  திரைப்படம் வெளிவர இருப்பதாக தகவல்.

நிச்சயம் காமெடிப்பிரியர்களுக்கு சரியான தீனி போட காத்திருக்கிறார்கள் படத்தின் கதாநாயகன் சிவாவும், மெகா வில்லனாக நடிக்கும் பவர்ஸ்டார் சீனிவாசனும்.

இருவருக்கும் தனித்தனி ரசிகர் வட்டம் உண்டு என்பதுடன், இருவரும் கூட்டணி சேர்ந்து நடித்தால் அதை ரசிப்பதற்கென இன்னொரு ரசிகர் வட்டமும் இருக்கிறதே..

அதற்கேற்றார்போல படத்தின் இயக்குனர் திரைவண்ணனும் காமெடிக்கு முழு உத்தரவாதம் இந்தப்படத்தில் உண்டு என நம்பிக்கை தருகிறார்.

ஜீவா நடித்த ‘கச்சீசேரி ஆரம்பம்’ படத்தை இயக்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சினிமா ஹீரோ. அவரது வெறித்தனமான ரசிகன்.

ஒரு கட்டத்தில் ஹீரோவுக்கும் ரசிகனுக்கும் ஏற்படும் மோதல். வெற்றி யாருக்கு என்பதுடன் சின்னதாக ஒரு மெசேஜையும் சொல்லியிருக்கிறார்களாம்.

ஆனால் இது யாருடைய மனதையும் புண்படுத்தாதவாறு இருக்கும் என்று சொல்கிறார் இயக்குனர் திரைவண்ணன்.

கதாநாயகியாக பெங்களூரை சேர்ந்த நைனா சர்வார் என்பவர் நடித்துள்ளார்.

இவர்களுடன் சென்ராயன், அருண் பாலாஜி, சிங்கமுத்து, மன்சூர் அலிகான், டிபி.கஜேந்திரன், மதுமிதா என பலர் நடித்துள்ளனர்.

அதுமட்டுமல்ல, இந்தப்படத்தில் ராஜ்கபூர், செல்வபாரதி, ஜெகன், டி.பி.கஜேந்திரன் உட்பட ஏழு இயக்குனர்களும் நடித்துள்ளனர். படத்திற்கு ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

Previous ArticleNext Article

Editor Picks

Read previous post:
‘அட்ரா மச்சான் விசிலு’ படத்திலிருந்து…

Close