இந்த வருடம் ஆறு படங்கள் -மகிழ்ச்சியில் நடிகை நிகிஷா பட்டேல்

3

பிக்பாஸ் புகழ் ஆரவ் நடித்துள்ள மார்க்கெட் ராஜா எம் பி பி எஸ் படத்தில் நடித்துள்ளார் நிகிஷி பட்டேல்.

இந்தப்படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில் நடிகை நிகிஷா பட்டேல் தன்னுடைய நடிப்பில் விரைவில் வௌவர உள்ள படங்கள் பற்றி சொல்கிறார்…

“சரண் இயக்கியுள்ள மார்க்கெட் ராஜா எம் பி பி எஸ் படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. பாடல்கள் மிக அற்புதமாய் வந்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தின் பாடல்களின் ஃபர்ஸ்ட்லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்தை தவிர எழில் இயக்கியுள்ள ஆயிரம் ஜென்மங்கள் படத்திலும் இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் பாண்டி முனி படத்திலும் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறேன்.

ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் ஒரு பெயரிடப்படாத படத்திலும், நடிகர் நந்தாவுக்கு ஜோடியாக மற்றொரு படத்திலும் நடித்து வருகிறேன்.

ஆக மொத்தம் இந்த வருடம் என்னுடைய நடிப்பில் ஆறு படங்கள் வெளியாகும். அதனால் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

சிறப்பான கதாபாத்திரத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பதே தனது லட்சியம்” என்கிறார் நிகிஷா பட்டேல்.