குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பும் – லதா ராவ்

1220

சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாகி நான்கு மொழிகளில் நடித்த லதா ராவ், வெள்ளித்திரையில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சின்னத்திரையில் நடிப்பதை தவிர்த்து, வெள்ளித்திரையில் தன்னுடைய முயற்சிகளை தொடர்ந்தார்.

வடிவேலுக்கு ஜோடியாக தில்லாலங்கடி என்ற படத்தில் காமெடியான கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் லதா ராவ்.

அதைத் தொடர்ந்து நடிகர் சசிகுமார் இயக்கத்தில் ஈசன், சமுத்திரக்கனி இயக்கத்தில் நிமிர்ந்து நில், கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் முடிஞ்சா இவன புடி உட்பட பல படங்களில் நடித்த இவர், அண்மையில் வெளியான கடிகார மனிதர்கள் என்ற படத்தில் கதையின் நாயகியாக அழுத்தமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அடுத்து வெளிவர இருக்கும் பரத் நடிக்கும் 8, விவேக், தேவயானி நடிக்கும் எழுமின் ஆகிய படங்களில் நடித்து வரும் லதாராவ் தொடர்ந்து சினிமாவில் எல்லாவிதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கும் தயாராக இருப்பதாக சொல்கிறார்.