ஐஸ்வர்ய லக்‌ஷ்மி அடுத்த நயன்தாராவா?

232

சிம்பு வைத்து வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற படு தோல்விப்படத்தை இயக்கிய சுந்தர்.சி. அடுத்து விஷால் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப்படத்தில் விஷால் உடன் மீண்டும் இணைந்து நடிக்கிறார் தமன்னா. இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது துருக்கி அஸர்பைஜான் ஆகிய நாடுகளில் நடந்து வருகிறது.

ஆக்‌ஷன் எண்டர்டெயினர் படமாக உருவாகி வரும் இந்த படத்தில் இன்னொரு ஹீரோயினாக பிரபல மலையாள நடிகை ஐஸ்வர்ய லக்‌ஷ்மி ஒப்பந்தமாகியுள்ளார்.

மலையாளத்தில் நிவின் பாலி, ஃபஹத் ஃபாசில், டோவினோ தாமஸ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்தவர் ஐஸ்வர்ய லக்ஷ்மி. சுந்தர்.சி. இயக்கத்தில், விஷால் நடிக்கும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

இந்த படம் தவிர கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் படத்திலும் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஐஸ்வர்ய லக்‌ஷ்மி.

இந்த இரண்டு படங்களில் மட்டுமின்றி வேறு சில படங்களிலும் ஐஸ்வர்ய லக்‌ஷ்மி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தப்படங்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியா வாய்ப்பிருக்கிறது.