அதேபோல் சினிமாவை அடைய வேண்டும் என்று நினைப்பவர்கள் சினிமாவை எந்த வழியிலாவது கண்டடைந்து வந்து சேர்வார்கள்.
சினிமாவும் தனக்கான ஆட்களை எப்படியோ ஈர்த்து தேடிக்கொள்ளும். அப்படித்தான் நடிகர் பிஜாய் மேனன் பற்றி நினைக்கத் தோன்றுகிறது.
பிஜாய் மேனன் என்கிற தன் பெயரை சினிமாவுக்காக வீரேந்திரன் என்று மாற்றிக்கொண்டுள்ளார்.
ஒரு சிறிய தொழில் நடத்தி வந்தவர், சத்யஜோதி தியாகராஜன் அழைப்பின்பேரில் நடிகர்களுக்கான தேர்வில் கலந்துகொண்டார்.
அப்படி ஆடிஸனுக்குச் சென்றுவிட்டு அலுவலகத்திலிருந்து வெளியே வந்தபோது ஜிம் பாய்ஸ் என்பவர்களின் ஊக்கத்தில் இன்னொரு படத்துக்கான நடிகர்களுக்கான தேர்வில் அழைப்பு வரவே, கலந்து கொண்டார்.
இப்படி சத்யஜோதியின் பார்த்திபன் கனவு படத்திலும் காக்க காக்க படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். அதன் பிறகு வர்ணஜாலம், எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி, கனவு மெய்ப்பட வேண்டும், ரிமோட், சதுரங்கம் போன்ற 16 படங்களில் நடித்தார்.
இதில் பல படங்கள் வெற்றிப்படங்கள்.சன் டிவியின் ஆனந்தம் மற்றும் சிதம்பர ரகசியம் போன்ற தொடர்களில் நடித்தவர் விஜய் டிவியில் தொடர்களிலும் நடித்துள்ளார்.
இவர் நடித்த படங்களின் வெற்றிக்குப்பின் பல பட வாய்ப்புகள் வந்தன. இப்படித்தான் 16 படங்களில் நடித்தார்.
இப்படி நடித்தவர் பிள்ளைகள் முன்னேற்றம் சார்ந்த குடும்ப சூழல் காரணமாக ஆஸ்திரேலிய நாட்டுக்குப் போய் 18 ஆண்டுகள் இருந்து, தன் கடமைகளை முடித்து வந்தவர், தனது உள்ளத்தில் உறங்கிக்கிடந்த கனவைப் புதுப்பித்துக் கொள்ளும் முகமாக மீண்டும் வாய்ப்புகள் தேட ஆரம்பித்தார்.
தாயகம் வந்தவர், மீண்டும் தனது தாய் வீடான சினிமாவில் மறுபிரவேசம் செய்து, தன் இடத்தை அடைந்து இப்போது சில படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்.
இப்போது தமிழில் இயல்வது கரவேல், வேதா மற்றும் கன்னடத்தில் ஷமந்த் எனப் புதிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
ஆசை தோசை அப்பளம் வடை படத்தில் நடிக்கவிருக்கிறார்.
நடிப்பாற்றலை வெளிப்படுத்த வாய்ப்பு தரும் குணச்சித்திரம் கொண்ட கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு ஆர்வமாக இருக்கிறார்.
நடிக்கும் பாத்திரத்தின் தேவை கருதி நடிக்க விரும்பும் இவர், நடிப்பதில் நேர் நிலை, எதிர் நிலை என்கிற கவலை இல்லை என்கிறார். வீரேந்திரன் வெற்றி பெற வாழ்த்துவோம்.