8 மணி நேரத்துக்கு 15 கோடி சம்பளம்…! விளம்பரப்படத்தில் கரன்சியை அள்ளிய கமல்…!

1352

விளம்பரங்கள் மக்களை ஏமாற்றுகின்றன என்ற அடிப்படையிலோ அல்லது வேறு காரணங்களினாலோ… சில நட்சத்திரங்கள் விளம்பரப்படங்களில் நடிப்பதில்லை என்ற கொள்கையுடன் இருக்கின்றனர்.

அவர்களில் முக்கியமானவராக இருப்பவர் ரஜினி. எத்தனையோ கோடிகளை அவரது காலடியில் கொட்டத் தயாராக இருந்தன விளம்பர நிறுவனங்கள். ரஜினி தன் கொள்கையில் உறுதியாக இருந்துவிட்டார்.

தொழிலில் மட்டுமின்றி தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவரை பின்பற்றி வரும் அஜித்குமாரும் விளம்பரங்களில் நடிப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்.

அஜித்தின் போட்டியாளரான விஜய், சூர்யா போன்றவர்களுக்கு இப்படிப்பட்ட கொள்கை எல்லாம் கிடையாது.

கிடைக்கிற விளம்பரங்களில் எல்லாம் நடித்து செமத்தியாய் பணம் பார்த்து வருகின்றனர்.

நடிகைகளில் விளம்பரப்படங்களில் நடிப்பதில்லை என்ற கொள்கையுடன் இருந்தவர் நயன்தாரா.

அவரிடம் பல கோடி பணத்தைக் காட்டியதும் பல்லைக்காட்டிக்கொண்டு பிரபல நகைக்கடை விளம்பரப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் நயன்தாரா.

விளம்பரப்படங்களில் நடிப்பதில்லை என்ற கொள்கையை நயன்தாராவைப் போலவே கமல்ஹாசனும் பணத்துக்காக பாதியோடு கைவிட்டுவிட்டு விளம்பரப்படத்தில் நடிக்க தலையாட்டிவிட்டார்.

போத்தீஸ் துணிக்கடை விளம்பரப்படத்தில் நடித்து முடித்துள்ளார் கமல்.

ஃபைவ்ஸ்டார் படத்தில் நடிகராக அறிமுகமான கிருஷ்ணா விளம்பரப்படங்களை இயக்கி வருகிறார்.

அவரது இயக்கத்தில்தான் போத்தீஸ் துணிக்கடை விளம்பரப்படத்தில் நடித்துள்ளார் கமல். இந்த விளம்பரங்கள் தீபாவளிக்காக தயாரிக்கப்பட்டிருக்கிறது.

பூந்தமல்லியில் உள்ள ஈவிபி பொழுதுபோக்கு பூங்காவில் போடப்பட்ட செட்டில் இதன் படப்பிடிப்பு நேற்று நடைபெற்றது.

இந்த விளம்பரப்படத்தில் நடிக்க கமல் கொடுத்தது ஒரே ஒரு நாள் கால்ஷீட். அதாவது, எட்டு மணி நேரம் மட்டுமே.

இத்தனை வருடகாலம் கட்டிக் காத்த கொள்கையை போத்தீஸ் விளம்பரத்தில் நடித்ததன் மூலம் காற்றில் பறக்க விட்டது ஏன்?

எட்டு மணி நேரத்துக்கு 15 கோடி கொடுத்தால்… கொள்கையாவது… புடலைங்காயாவது?

காசு… பணம்… துட்டு… மணி… மணி…..