ஆனந்த் பாபு கௌரவ வேடத்தில் நடிக்கும் ஜமாய்

493

கிளாசிக் சினி சர்க்யூட் என்ற படநிறுவனம் சார்பாக எம்,ஜெயக்குமார் தயாரிக்கும் படம் -ஜமாய்.

இந்த படத்தில் நவீன் , உதய் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்க, கதாநாயகிகளாக வைஜெயந்தி , நிமிஷா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்.

மற்றும் டி.பி.கஜேந்திரன் , சங்கீதா பாலன் , மதன் பாப், ராஜப்பா, தீபிகா மாஸ்டர் ஆகியோர் நடிக்கிறார்கள்.  இவர்களுடன் நடிகர் ஆனந்த்பாபு ஒரே ஒரு பாடல் காட்சியில் கௌரவ வேடத்தில் நடிக்கிறார்.

சுமார் 25 வருடங்களுக்கு முன்பு ஆனந்த்பாபு கதாநாயகனாக நடித்து 250 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்ற “பாடும் வானம்பாடி” என்ற படத்தை இயக்கியவர் எம்.ஜெயக்குமார்.

இந்த படத்தில் சிறுவன் ஒருவனுக்கு நடனம் சொல்லி தரும் மாஸ்டர் வேடத்தில் கௌரவ வேடத்தில் நடித்து தரும்படி ஆனந்த்பாபுவிடம் கேட்டாராம் இயக்குனர். மறுப்பேதும் சொல்லாமல் ஆனந்த் பாபு நடித்து கொடுத்திருக்கிறார்.

கண்ணுக்குள் கனவிருந்தால் நெஞ்சுக்குள் துணிவு வரும்  என்ற இந்த பாடல் காட்சி சமீபத்தில் அசோக் ராஜா நடன அமைபில் படமாக்கப் பட்டது.

ஒளிப்பதிவு – எம்.டி.சுகுமார், பாடல்கள் – வாலி, இசை – தினா, எடிட்டிங் – கணேஷ்குமார், நடனம் – ஜான்பாபு , அசோக்ராஜா, வசனம் – சிவா , கலை – மோகன், கதை , திரைக்கதை, தயாரிப்பு, இயக்கம் – எம்.ஜெயக்குமார்

கல்லூரி காதல், நடனம், இசை மூன்றையும் கலந்த கலவையாக ஜமாய்” உருவாகிறதாம்.

கலவை சரியா இருக்கணும்..