அங்கே 50 நாட்கள், இங்கே 50 நாட்கள் – விஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’ பட அப்டேட்ஸ்

21

காமெடி, ஃபேமிலி சப்ஜெக்ட், ,திரில்லர், ஹாரர் படம், ஆக்ஷன் என அனைத்துவகையான கதைகளை படமாக்கி வெற்றி கண்டு வருபவர் இயக்குநர் சுந்தர் .சி.

இவரது இயக்கத்தில் மீண்டும் ஒரு “ஆக்ஷன்” படம் உருவாகி வருகிறது.

இது இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு முழு நீள ஆக்ஷன் படமாக உருவாக்கப்பட்டுவருகிறது. அதனாலோ என்னவோ இந்தப்படத்துக்கு “ஆக்ஷ்ன்” என்றே பெயர் சூட்டியுள்ளார்கள்.

ஏற்கனவே பல ஆக்ஷன் படங்களில் பரபரப்பான நடிப்பை வழங்கியிருக்கும் விஷால் இந்தப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

ஆக்ஷன் படத்தில் இவர் மிலிட்டரி கமாண்டோ ஆபீஸராக நடிக்கிறார். ஒரு உண்மையை கண்டுபிடிக்க பல நாடுகளுக்குச் செல்கிறார். அங்கே ஆக்ஷன், சேசிங் என விறுவிறுப்பாக ஆக்ஷன் காட்சிகளை அமைத்துள்ளார்கள் ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ்.

சமீபத்தில் தேசிய விருது பெற்ற இவர்கள் இப்படத்தில் பல வித்தியாமான சண்டை காட்சிகளை அமைத்துள்ளார்கள்.

அவற்றில் பல காட்சிகளில் விஷால் டூப் இல்லாமல் நிஜமாகவே நடித்திருப்பது மெய் சிலிர்க்க வைக்கும் என்கிறார்கள் இந்த இரட்டையர்கள்.

சண்டைக்காட்சிகளுக்காக பல கோடிகள் செலவு செய்திருக்கிறார் தயாரிப்பாளர் ட்ரைடென்ட் ரவி.

சுந்தர். சி இயக்கிய படங்களிலேயே மிகவும் பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு துருக்கி, அசார்பைசான், கேப்படோசியா, பாகு, இஸ்தான்புல், மற்றும், தாய்லாந்து நாட்டில் உள்ள கிராபி தீவு, பாங்காக் போன்ற வெளிநாடுகளில் 50 நாட்களுக்கு மேலாகவும், இந்தியாவில் ஜெய்ப்பூர் ,ரிஷிகேஷ் ,டேராடூன், ஹைதராபாத், சென்னை போன்ற இடங்களில் 50 நாட்களுக்கு மேலாகவும் நடைபெற்றுள்ளது.

விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார்.

மற்றொரு கதாநாயகியாக மலையாளத்தில் பிரபலமான ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். இந்தப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் யோகி பாபு ,ராம்கி ,சாயாசிங்,ஷாரா, பழ .கருப்பைய்யா , பிரபல இந்தி நடிகர் கபீர் சிங் மற்றும் பலர் நடிக்கிறார்கள் .

இதன் படப்பிடிப்பு முடிவடைந்தது .போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.