அச்சம் என்பது மடமையடா படத்துக்கு தடை?

521

சிம்பு நடிக்கும் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது சிம்புவுக்கு மட்டுமல்ல, அந்தப் படத்தை இயக்கும் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் கூட உறுதியாக தெரியாது.

வேதாளம் எப்போது முருங்கை மரம்  ஏறும் என்பதுபோல் சிம்பு நடிக்கும் படம் எப்போது பிரச்சனைக்குள்ளாகும் என்பதை யாராலும் கணிக்க முடியாது.

சில படங்கள் மளமளவென வளர்ந்து வரும். ஆனால் சில நாட்கள் படப்பிடிப்பு பாக்கி உள்ள நிலையில் முடங்கிவிடும்.

கடைசியாக் சிம்புவின் நடிப்பில் வெளியான இது நம்ம ஆளு படம் இப்படித்தான் சிக்கி சின்னாபின்னமானது.

சிம்பு படங்களுக்கு ஏற்படும் சோதனைக்கு கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ‘அச்சம் என்பது மடமையடா’ படமும் விதிவிலக்கில்லை.

2013 ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படம் சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றநிலையில் சிம்புவுக்கும் கௌதம் மேனனுக்கும் பிரச்சனை ஏற்பட்டது.

படத்தை நிறுத்திவிட்டு, அஜித்தை வைத்து ‘என்னை அறிந்தால்’ படத்தை இயக்கப்போனார் கௌதம் மேனன்.

பிறகு சிம்பு படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கி மளமளவென வளர்ந்தது.

இந்தப்படம் அண்டர்புரடக்ஷனில் இருக்கும்போதே தனுஷை வைத்து எனை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தை ஆரம்பித்தார் கௌதம் மேனன்.

அதனால் கடுப்பான சிம்பு கௌதம் மேனனுக்கு  டேட் தராமல் இழுத்தடிக்க ஆரம்பித்தார்.

அதனால் ‘தள்ளிப் போகாதே’ பாடலைக் கூட படமாக்க முடியாமல் தவித்தார் கௌதம் மேனன்.

இந்நிலையில்,  ‘தள்ளிப்போகாதே…’ பாடல் காட்சி இல்லாமலே  அச்சம் என்பது மடமையடா படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டார் இயக்குநர் கௌதம் மேனன். செப்டம்பர் 9 ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிப் படங்களையும் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதற்கிடையில் சிம்புவுக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை கொடுக்காமல் படத்தை வெளியிடக் கூடாது என கோர்ட்டுக்குப் போக இருக்கிறாராம் டி.ராஜேந்தர்.